தீவெங்கும் 10 கிளைகளுடன் சேவையாற்றும் ஹோ லா சட்ட நிறுவனம்

உல­க­நா­தன் ஜெய­கு­மார் என்ற 42 வயது வெளி­நாட்டு ஊழி­யர் உள்­ளூர் கட்­டு­மா­னக் குத்­தகை நிறு­வ­னம் ஒன்­றில் பணி­யாற்­றிக்கொண்­டி­ருந்த காலத்­தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி விபத்து ஏற்­பட்­டது. அதில் அவ­ருக்கு கடு­மை­யான காயங்­கள் ஏற்­பட்­டன. இரண்டு கால்­களும் முட்­டிக்கு மேல் துண்­டிக்­கும் நிலை ஏற்­பட்­டது. தற்­பொ­ழுது அவர் இயந்­திர சக்­க­ர­நாற்­கா­லி­யின் துணை­கொண்டு வாழ்ந்து வரு­கி­றார்.

தனக்­கேற்­பட்ட கடு­மை­யான காயங்­க­ளுக்­காக ஊழி­யர் இழப்­பீடு சட்­டத்­தின்­கீழ் அவர் முன்­வைத்த கோரிக்­கையை ஆராய்ந்த மனி­த­வள அமைச்சு அவ­ருக்கு சேர வேண்­டிய இழப்­பீட்­டுத் தொகையை $125,362.80ஆக மதிப்­பீடு செய்­தது.

இதை ஏற்­காத உல­க­நா­தன் பணி­யின்­போது ஏற்­பட்ட விபத்து கார­ண­மாக தனக்கு ஏற்­பட்ட காயங்­க­ளுக்­காக கிம் போக் கான்­டி­ரேக்­டர் பிரை­வெட் லிமி­டெட் என்ற நிறு­வ­னத்­தின் மீது வழக்கு தொடுத்­தார்.

நீதி­மன்ற ஆவ­ணங்­க­ளின்­படி, ரிபப்­ளிக் ெபாலி­வார்ட் என்ற இடத்­தில் மரங்­க­ளை­யும் அவற்­றின் கிளை­க­ளை­யும் வெட்­டும் பணி­யில் உல­க­நா­தன் ஈடுட்­டி­ருந்­தது தெரி­ய­வந்­துள்­ளது.

மரங்­களும் அவற்­றின் கிளை­களும் வெட்­டப்­பட்டு, பட்­டை­யால் இறுக்­கிக் கட்­டப்­பட்டு, லாரி­யில் பாரந்­தூக்கி மூலம் ஏற்­றப்­பட்­டி­ருந்­த­தா­கக் கூறப்­படுகிறது. பின்­னர், மரக்­கி­ளை­களில் கட்­டப்­பட்­டி­ருந்த பட்­டையை அவிழ்க்­கு­மாறு உல­க­நா­த­னி­டம் கூறப்­பட்­டது.

அந்த சம­யம் உல­க­நா­தன் கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்த மரக்­கி­ளை­க­ளின் மேலி­ருந்­துள்­ளார். இந்த சம­யம் பார்த்து மரக்­கி­ளை­களில் ஒன்று சரிந்­தது. உல­க­நா­த­னும் தன்­னிலை தவறி லாரி­யி­லி­ருந்து கீழே விழுந்­தார். மற்­றொரு மரக்­கிளை சரிந்து உல­க­நா­தன் மீது பல­மாக விழ அவ­ரு­டைய இரண்டு கால்­களும் சிதைந்­தன.

உல­க­நா­தன் சார்­பில் இந்த வழக்கை ஏற்று நடத்­திய ஹோ லா கார்ப்­ப­ரே­ஷன் சட்ட நிறு­வ­னம் சம்­பவ இடத்­திற்குச் சென்று அங்­கி­ருந்து எவ்­வாறு மரக்­கி­ளை­கள் லாரி­யில் ஏற்­றப்­பட்­டன, அதில் உல­க­நா­தன் உட்­பட கிம் போக் கான்­டி­ரேக்­டர் பிரை­வெட் நிறு­வ­னம் எவ்­வாறு தனது ஊழி­யர்­களை ஈடு­ப­டுத்­தி­யது என்­பது போன்ற விவ­ரங்­களை புகைப்­ப­டங்­கள் மூல­மா­க­வும் காணொளி மூல­மா­க­வும் சேக­ரித்­தது.

இதன் அடிப்­ப­டை­யில் அது கிம் போக் நிறு­வ­னத்­தின் வழக்­க­றி­ஞர்­க­ளு­டன் நீண்ட பேச்­சு­வார்த்­தை­யில் ஈடுபட்டு உல­க­நா­த­னுக்கு இழப்­பீட்டு தத்ொகை­யாக $410,000 பெற்­றுத் தந்­துள்­ளது. இதைப் பெற்­றுக்­கொண்டு உல­க­நா­தன் தற்­பொ­ழுது இந்­தி­யா­வுக்கு திரும்­பி­யுள்­ளார்.

விபத்­து­கள் குறித்த அனைத்து வித­மான வழக்­கு­ளை­யும் சிறப்­பு­றக் கையா­ளும் ஹோ லா கார்ப்­ப­ரே­ஷன் சட்ட நிறு­வ­னம் இந்த துைறயில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் 2021ஆம் ஆண்­டின் சிறந்த சட்ட நிறு­வ­னங்­க­ளுக்­கான சிறந்த தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் முத­லி­டம் வகிப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

குடும்ப நல சட்­டம், ஊழி­யர் பணி நிய­மன சட்­டம் ஆகி­ய­வற்­றி­லும் முத­லி­டத்­தில் உள்­ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு திரு ஹோ சின் சா என்­ப­வ­ரால் மிடில் ரோட்­டில் சிறிய நிறு­வ­ன­மா­கத் தொடங்­கப்­பட்ட ஹோ லா கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம், இன்று சிங்­கப்­பூ­ரின் அதி­க­மான கிளைகளைக் கொண்ட நிறு­வ­ன­மாக வளர்ந்­துள்­ளது. இந்­நி­று­வ­னம் தனது 10வது கிளையை அண்மையில் உட்­லண்ட்­சில் திறந்­துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!