ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நாய் பூங்கா, பறவை உறைவிடம்

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நாய் பூங்கா, பறவை உறைவிடம்

1 mins read
341d11b8-f9bd-4ef9-84dd-e700f2da6eef
தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­கழகத்­தின் உயி­ரி­யல் துறை விரிவுரையாள­ர் என் சிவ­சோ­தி­ இருவரும் மரம் நட்டனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

தேசிய பூங்கா வாரி­யம், ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­கில் புதிய நாய் பூங்கா­வைத் திறந்­துள்­ளது. அதுவே நாட்­டின் கிழக்­குப் பகு­தி­யில் அமைந்­துள்ள ஆகப் பெரிய நாய் பூங்கா ஆகும்.

அதோடு, பற­வை­கள் இளைப்­பா­றும் இடம் ஒன்­றை­யும் அந்­தப் பூங்­கா­வில் வாரி­யம் நேற்று திறந்­தது. இவை இரண்­டும் ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­கில் வளர்ப்­புப் பிரா­ணி­க­ளுக்கு ஏற்ற வச­தி­களை மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

இவற்­றோடு இந்­தப் பூங்­கா­விற்­காக, ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தோழமைச் சமூ­கம் என்ற ஒரு புதிய அமைப்­பும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இது அந்த வட்­டா­ரத்­தைச் சேர்ந்த பன்­மய சமூ­கத்தைப் பிரதி­பலிக்­கிறது.

இந்­தப் புதிய அமைப்­பின் மூலம் இந்­தப் பூங்­காவை நிர்­வ­கிப்­ப­தில் சமூ­கம் மேலும் மும்­மு­ர­மாக பணி­யாற்ற முடி­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இயற்கை நகர் என்ற சிங்­கப்­பூரின் இலக்கையொட்­டி­யும் இது இடம்­பெ­று­கிறது. இந்த இலக்­கில் சமூ­கத்­துக்கு முக்­கிய இடம் உண்டு.

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்­கில் நாய் பூங்கா, பறவை உறை­வி­டம் ஆகிய புதிய ஏற்­பா­டு­கள் திறக்­கப்­பட்­டதை ஒட்டி நேற்று அங்கு சமூக மரம் நடும் நிகழ்ச்சி நடந்­தது.

தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ் அதில் கலந்து­கொண்­டார். அவ­ரு­டன் சேர்ந்து ஈஸ்ட் கோஸ்ட் பார்க் தோழரும் சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் உயி­ரி­யல் துறை விரிவுரையாள­ரு­மான என் சிவ சோதி­யும் மரம் நட்­டார்.