சித்திரத் தமிழ்: கலைஞர்களுடன் ஒரு சுவாரசிய கலந்துரையாடல்

வாட்ஸ்­அப், இன்ஸ்­ட­கி­ராம், டெலி­கி­ராம் போன்ற சமூக ஊட­கங்­களில் ‘ஆர்ட்­டி­ஃபார்ட்­டி­பி­ருன்’ வடி­வ­மைத்த தமிழ் சித்­திர ஒட்­டு­வில்­லை­களை நாம் பயன்­ப­டுத்­தி­ இருப்­போம். இது பகுதி நேர­மாக சித்­தி­ரங்­கள் வரைந்து வரும் பிருந்­தா­வின் கலைப் படைப்பு.

தனது படைப்­பு­க­ளின் வழி தமிழ் கலா­சா­ரத்­தைப் பிர­தி­நி­திப்­பது மட்­டு­மின்றி இளை­யர்­கள் அதி­கம் பயன்­ப­டுத்­தும் சமூக ஊட­கங்­களில் தமிழ்ப் புழக்­கத்தை அதி­க­ரிப்­பதை நோக்­க­மாகக் கொண்டு படைப்­பு­களை உரு­வாக்கி வரு­கி­றார் சித்­தி­ரக் கலை­ஞர் பிருந்தா.

சித்­தி­ரக் கலை­ஞர் என்­ப­தை­யும் தாண்டி, தமிழ் சித்­தி­ரப் படைப்­பு­கள் எவ்­வாறு தமிழ் இலக்­கி­யப் படைப்­பு­க­ளுக்கு கைகொ­டுக்­க­லாம், ஒரு சுவா­ரசிய­மான இலக்­கிய அனு ­ப­வத்தை உரு­வாக்க தமிழ் எழுத்­தா­ளர்­கள் மற்­றும் தமிழ் சித்­திர வடி­வ­மைப்­பா­ளர்­கள் எவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­லாம் என்­பதை பற்றி இம்­மா­தம் 5ஆம் தேதி சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழாவை முன்­னிட்டு நடை­பெற்ற ‘சித்­தி­ரத் தமிழ்’ என்ற உரை­யா­டல் நிகழ்ச்­சி­யில் குமாரி பிருந்தா விளக்­கி­ இ­ருந்­தார். இணை­யம்­வழி நடத்­தப்­பட்ட இந்த நிகழ்ச்­சிக்கு தேசிய கலை­கள் மன்­றம் ஏற்­பாடு செய்திருந்தது.

பிருந்­தா­வோடு வரைகதை கலை­ஞர் ராம் பிர­சாத், சுவ­ரோ­வி­யக் கலை­ஞர் இவ்­லின் சோனியா ராயன், உயி­ரோ­வி­யக் கலை­ஞ­ரும் குறும்­ப­டத் தயா­ரிப்­பா­ள­ரு­மான ஜெக­நாத் ராமா­னு­ஜம் ஆகிய சித்­திர ஓவி­யர்­கள் இந்த உரை­யா­ட­லில் கலந்­து­கொண்டு தமிழ் சித்­தி­ரங்­க­ளைப் பற்­றிய தங்­க­ளது கருத்­து­க­ளை­யும் சிந்­த­னை­க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­ட­னர். இந்த உரை­யா­ட­லின் நெறி­யா­ள­ராக குமாரி ஆயி­லிஷா மந்­திரா பங்­கேற்­றார்.

கலை ஆர்­வத்தை வெளிப்­படுத்­த­வும் தமிழ்ப் பண்­பாடு பற்­றிய மீள்­பார்­வை­களை முன்­வைக்­க­வும் சித்­தி­ரம், உயி­ரோ­வி­யம் இரண்­டை­யும் கையில் எடுத்­துள்­ள­னர் இந்த இளம் கலை­ஞர்­கள். அவர்­க­ளது படைப்­பு­கள் பொது­வெ­ளி­யில் கவ­னத்தை ஈர்த்­துள்­ள­போ­தும், இலக்­கிய வெளிக்­குள் அவர்­கள் இன்­ன­மும் கால் பதிக்­க­வில்லை.

மேலும், சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கி­யத்­தில் சித்­தி­ரப் படைப்­பு­கள் அளிக்­கக்­கூ­டிய புதிய வாய்ப்­பு­கள் பற்­றி­யும் இங்கு சித்­தி­ரப்­பட நாவல் உரு­வா­கும் சாத்­தி­யம் பற்­றி­யும் அவர்­கள் உரை­யா­டி­னர். தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தி­லும் நடை­பெற்ற இந்த நிகழ்ச்­சி­யில் ஆங்­கில விளக்­க­ வ­ரி­கள் சேர்க்­கப்­பட்­டன.

“சித்­திர விளக்­கப்­ப­டங்­கள் மற்­றும் ‘கிரா­ஃபிக்ஸ்’ போன்­ற­வற்றை இன்­று­வரை தமிழ் இலக்­கி­யப் படைப்­பு­களில் அதி­கம் பயன்­படுத்­தப்­ப­டு­வ­தில்லை என்­ப­தைப் பற்றி உரை­யா­டி­யது மிக சுவா­ர­சி­ய­மான ஒன்­றாக இருந்­தது. இந்த நிகழ்ச்­சி­யின் வழி என்­னை­விட மிக­வும் வித்­தி­யா­ச­மான சித்­திர ஓவிய பாணி­க­ளைக் கொண்ட சக கலை ஆர்­வ­லர்­க­ளைச் சந்­தித்­தேன்,” என்று தெரி­வித்­தார் பிருந்தா.

உரை­யா­ட­லில் பங்­கேற்ற வரைகதை கலை­ஞர் ராம் பிர­சாத், தாம் உரு­வாக்­கிய ஒரு தமிழ் வரைக்­கதை (Comic Book) புத்­த­கத்தை ‘தமிழா’ என்ற இளை­யர் குழு­வு­டன் இணைந்து விரை­வில் வெளி­யி­ட­வுள்­ள­தாக கூறி­னார்.

இந்த வரைகதை புத்­த­கம் தமி­ழில் பேசு­வ­தைப் பற்­றி­யது. தமி­ழில் சர­ள­மாக பேச முடி­யா­விட்­டா­லும், குறைந்­த­பட்­சம் தமி­ழில் பேச முயற்சி செய்ய வேண்­டும் என்­னும் கருத்­தைக் கொண்­டுள்­ளது இந்த வரைக்­கதை.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இறு­தி­யாண்டு மாண­வ­ரான ராம் பிர­சாத், சித்­தி­ரக்­கலை மீது உள்ள ஆர்­வத்­தால் அத­னைப் பள்­ளிப் பாட­மாக பயின்­றார். அந்த ஆர்­வத்­தால், கொவிட்-19 கிருமி பர­வல் காலத்­தில் வீட்­டி­லி­ருந்­த­போது வரை­க­தைப் படைப்­பு­களை அவர் உரு­வாக்­கத் தொடங்­கி­னார். தனது படைப்­பு­க­ளின் வழி நவீன கலை வடி­வ­மான வரை­க­தை­யை­யும் தமி­ழின் செறி­வு­மிக்­கப் பண்­பாட்­டுக் கூறு­க­ளை­யும் இணைக்க ராம் முற்­ப­டு­கி­றார்.

மேற்­கத்­திய உல­கில், குறிப்­பாக இலக்­கிய சூழ­லில் சித்­திர ஓவி­யங்­க­ளின் பங்கு அதி­கம் உள்­ளது என்­ப­தோடு அங்கு அதன் பயன்­பா­டும் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தப் போக்கு சிங்­கப்­பூர் இலக்­கிய சூழ­லில் இல்லை என்­னும் கருத்­தை­யும் கலை­ஞர்­கள் முன்­வைத்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!