சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவின் டாட்டா குழுமத்திற்கும் சொந்தமான விஸ்தாரா விமான நிறுவனம், அமெரிக்காவுக்கு நேரடி விமானச் சேவையைத் தொடங்குவது பற்றி பரிசீலிக்கிறது.
கொவிட்-19 தொற்று காரணமாக நேரடி விமானச் சேவைகளுக்குத் தேவை அதிகரித்து வருவதே இதற்கான காரணம் என்று மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
விஸ்தாரா நிறுவனம் எப்போது அந்தச் சேவையைத் தொடங்குவது, அதில் எந்த வகை விமானங்களை ஈடுபடுத்துவது போன்றவற்றை இனிமேல்தான் முடிவு செய்யும்.
அதே வேளையில், அது பல்வேறு அம்சங்களையும் பரிசீலித்து வருவதாக அந்த நிர்வாகி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
கொவிட்-19 காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் பல நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதால் விமானப் பய ணத்துறை படுத்துவிட்டது.
குறைந்த அளவில் விமானச் சேவைகள் தொடங்கி இருக்கின்றன என்றாலும் பயணிகள் குறைவாகவே இருக்கிறார்கள்.
இந்தத் துறை முற்றிலும் மீட்சி அடைந்து பழைய நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கப்படுகிறது.
பயணம் செய்யவேண்டிய தேவை உள்ளவர்களும் இடைவழியில் தரை இறங்கினால் கிருமித்தொற்றுக்கு ஆளாக நேரிடலம் என்று அஞ்சுகிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் நேரடி விமானச் சேவைகளையே விரும்புகிறார்கள். இந்தப் போக்கு நீடிக்கும் என்றும் தெரிகிறது.

