அறிவுத் திறன் குன்றிய மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 20 ஆண்டு சிறை

அறிவுத் திறன் குன்றிய மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 20 ஆண்டு சிறை

1 mins read
c9225fc8-6502-4e40-b16c-be154919e11d
-
Google News Preferred Icon

அறிவுத் திறன் குன்றிய மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய தந்தைக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தப் பெண்ணுக்குத் தற்போது 17 வயது. அவர் ஆறு வயதிலிருந்து எட்டு வயதாக இருந்தபோது தந்தையால் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டார்.

அவரது தாயார் வீட்டில் இல்லாதபோது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தைக் காக்க குற்றம் புரிந்த அவரது தந்தையின் பெயரை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதால் அப்பெண் கடுமையான மனவுளைச்சலுக்கு ஆளானார்.

தம்மைத் தாமே காயப்படுத்திக்கொள்ள அவர் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது.