பிரதமர் லீ: எதிர்காலத்தின் மீது உலகம் கவனம் செலுத்த வேண்டும்

கொவிட்-19 தொடர்­பான பாதிப்­பு­களை எதிர்­கொள்­வ­தில் உலக நாடு­கள் பர­ப­ரப்­பாக செயல்­பட்டு கொண்­டி­ருந்­தா­லும், எதிர்­கா­லத்­தின் மீது கவ­னம் செலுத்­து­வ­தும் முக்­கி­யம் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

சவூதி அரே­பி­யா­வின் தலை­மை­யில் நடை­பெற்ற ஜி-20 மெய்­நி­கர் உச்­ச­நிலை மாநாட்­டில் பங்­கேற்க சிறப்பு அழைப்பு பெற்­றி­ருந்த சிங்­கப்­பூர் சார்­பில் திரு லீ நேற்று முன்­தி­னம் பேசி­னார். அதில் எதிர்­கா­லத்­தின் மீது கவ­னம் செலுத்­து­வ­தில் இரண்டு அணு­கு­மு­றை­களை திரு லீ பரிந்­து­ரைத்­தார்.

“ஒன்று, சமூக பின்­ன­டைவை வலுப்­ப­டுத்­து­வது. கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு முன் பல நாடு­கள் தன்­னைப்­பே­ணித்­தன உணர்­வு­க­ளால் கடு­மை­யான மன அழுத்­தத்தை எதிர்­நோக்­கி­யி­ருந்­தன. தனித்து விடப்­பட்ட இந்த நாடு­க­ளின் பிரச்­சி­னை­கள் இன்­னும் பெரி­தா­கும். இதற்­குத் தீர்வு காண, மக்­க­ளுக்கு நல்ல வேலை­களை உருவாக்கி, அவற்­றைத் தக்­க­வைத்­துக் கொள்ள வேண்­டும்.

“கல்வி, பொது வீட­மைப்பு, பொதுச் சுகா­தா­ரம், சமூக பாது­காப்பு வலை­யைப் பலப்­ப­டுத்­து­தல் போன்­ற­வற்­றுக்கு அதிக அள­வில் முத­லீடு செய்ய வேண்­டும். இதன் மூலம் விளை­யும் வெற்­றிக் கனி­களை வசதி குறைந்­த­வர்­களும் சுவைக்க முடி­யும். இதன் கார­ண­மா­கத்­தான் சம்­ப­ளம், மறு­திறன் பயிற்சி, பாலர் கல்­வித் துறை, பொது மருத்­து­வ­மனை­கள், பரா­ம­ரிப்பு வச­தி­கள் போன்­ற­வற்­றில் சிங்­கப்­பூர் முத­லீடு செய்­துள்­ளது,” என்று விவ­ரித்­தார்.

“இரண்­டா­வது அணு­கு­முறை, பொரு­ளி­யல் இடை­யூ­று­களால் துவண்டு விடா­மல், நிலைத்­தன்­மை­யு­டைய எதிர்­கா­லத்­துக்­கான முயிற்­சி­களை இரட்­டிப்­பாக்க வேண்­டும். பருவ நிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது. ஆனால் சிறிய நாடாகிய சிங்கப்பூரால் அதை தனியாகச் செய்ய முடியாது. மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் தான் அது சாத்தியமாகும்.

“ஆக, சிறிய, பெரிய நாடுகள் பருவநிலை மாற்றத்துக் கான பாரிஸ் உடன்பாட்டில் பங்கேற்று, அதன் மூலம் தங்கள் கடப்பாட்டை வெளிப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சியை ஜி-20 அமைப்பு முன் னெடுத்து செல்லும் என்பதும் சிங்கப்பூரின் வலுவான நம்பிக்கை,” என்றும் பிரதமர் லீ தமது உரையில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!