சுற்றுலா ஊக்கத்தொகை பற்றுச்சீட்டு பயன்பாட்டு நடைமுறை எளிதாக்கப்பட வேண்டும்: சிங்கப்பூரர்கள் பலரின் கருத்து

கொவிட்-19 நெருக்­க­டி­யால் சுற்­று­லாத்­துறை மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தத் துறையை நம்­பி­யி­ருந்த ஹோட்­டல்­கள், உண­வகங்­கள், கடை­கள், உல்­லா­சத் தளங்­கள் போன்ற தொழில்­துறை மீண்­டும் தலை­யெ­டுக்­கும் வகை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ‘சுற்­றுலா ஊக்­கத்­தொகை’ என்ற வடி­வில் நூறு வெள்ளி மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­கள் அடுத்த மாதம் 1ஆம் தேதி வழங்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

இதற்கு மக்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இருப்­பி­னும், அதன் பயன்­பாட்டு நடை­முறை சிர­ம­மாக உள்­ள­தாக பய­னா­ளர்­கள் சிலர் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

டிசம்­பர் மாதம் 1ஆம் தேதி­யிலி­ருந்து 18 வயது அதற்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கும் ‘சிங்­கப்­பூர் ரீடிஸ்­க­வர்ஸ்’ பற்­றுச்­சீட்டு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அதை உள்­ளூர் உல்­லாச இடங்­கள், உள்­ளூர் சுற்­றுலா மற்­றும் ஹோட்­டல் ஆகி­ய­வற்­றுக்­குப் பயன்­ ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

இந்­நி­லை­யில், இந்­தத் திட்­டத்­திற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் பல­ரி­டம் இருந்து வர­வேற்பு கிடைத்­தா­லும் சிலர் அது பயன்­ப­டுத்­தும் விதம் மிக­வும் எளி­தாக இல்லை என தெரி­வித்­துள்­ள­னர்.

முக்­கி­ய­மாக அந்­தப் பற்­றுச்­சீட்டை பயன்­ப­டுத்­து­வ­தற்­கான நடை­முறை மிக­வும் சிக்­க­லாக உள்­ளது என்­றும் அத­னால் அந்­தப் பற்­றுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்த சிலர் தயக்­கம் காட்­டு­வ­தா­க­வும் கூறப்­படு­கிறது.

குறிப்­பாக மூத்த குடி­மக்­களில் பெரும்­பா­லா­னோர் இந்­தப் பற்­றுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்த தயங்­கு­கின்­ற­னர் என்று கூறப்­ப­டு­கிறது.

$10 மதிப்­பில் கிடைக்­கும் இந்­தப் பற்­றுச்­சீட்­டு­களை குளோ­பல்­டிக்ஸ், க்லூக் & யூஓபி டிரா­வெல் பிளே­னர்ஸ், டிரா­வ­லொக்­கியா மற்­றும் டிரிப் டாட் காம் ஆகிய நிறு­வ­னங்­களில் இணை­யச் சேவை மூலம் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

இந்த யோச­னைக்கு பய­னா­ளர்­க­ளி­டம் வர­வேற்பு இருந்­தா­லும் இதை நடை­மு­றைப்­ப­டுத்­தும் முறை சிக்­க­லா­க­வுள்­ளது என்ற குறை­கூ­றல்­களும் எழுந்­துள்­ளன.

இந்­தப் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­குப் ஒரு பொது­வான இணை­யத் தளம் இருந்­தால் நல்­லது என்­கின்­ற­னர் பய­னா­ளர்­கள்.

பய­னா­ளர்­க­ளைப் போலவே சிறிய வர்த்­த­கர்­களும் சுற்­று­லாத்­து­றை­யின் ஒரே இணை­யத் தளம் மூலம் இந்த பற்­றுச்­சீட்டு பயன்­பாடு இருந்­தால் மக்­கள் அவற்றை எளி­தா­கப் பயன்­ப­டுத்த முடி­யும் என்று கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

அது­போல அந்த இணை­யத் தளத்­தில், எந்­தெந்த வழி­களில் இதைப் பயன்­ப­டுத்­த­லாம் என்ற விவ­ரங்­க­ளைத் தேடிப்­பெ­றும் வகை­யில் மையப்­ப­டுத்­தப்­பட்ட தேடி அறி­யும் கரு­வி­யும் அது தொடர்­பான இணை­யத் தளங்­க­ளின் முக­வ­ரி­களும் இடம்­பெ­ற­வேண்­டும் என்று பல்­க­லைக் கழக மாணவி லின் கோ ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­துள்­ளார்.

“உள்­ளூர் பய­ணத்­து­றைக்கு ஊக்­க­ம­ளிக்க அர­சாங்­கம் அறி­வித்­தி­ருக்­கும் இத்­திட்­டம் வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், அது செயற்­படுத்­தப்­ப­ட­வி­ருக்­கும் முறை­தான் சற்று குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கிறது.

“நான் இந்­தப் பற்­றுச்­சீட்­டு­களைப் பயன்­ப­டுத்தி என் குடும்­பத்தை உள்­ளூர் சுற்­று­லாத் தலத்­துக்கு அழைத்­துச் செல்ல விரும்பு­ கி­றேன். பற்­றுச்­சீட்டை ஏற்­றுக்­கொள்­ளும் நிறு­வ­னங்­கள் பல இருப்­ப­தால், அவற்­றி­லி­ருந்து நமக்கு விருப்­ப­மா­ன­தைத் தேர்வு செய்­வதற்கு குறிப்­பிட்ட ஒரே முனை­யம் இருந்­தால் சுல­ப­மாக இருக்­கும்,” என்­றார் 49 வயது பொறி­யா­ளர் திரு ராஜு கோவிந்­த­சாமி.

இந்த சுற்­றுலா ஊக்­கத்­தொகை திட்­டத்­திற்கு சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இருப்­பி­னும் கிடைக்­கப்­பெ­றும் பற்­றுச்­சீட்­டைப் பயன்­ப­டுத்­தும் நடை­முறை எளி­தாக்­கப்­பட வேண்­டும் என்று அவர்­கள் விரும்­பு­வ­தா­கத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!