தகவல்தொடர்பு தொழில்நுட்ப துறையில் 12,000க்கும் மேற்பட்ட வேலைகள்

தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்ப (ஐசிடி) துறை­யில் 12,000க்கும் மேற்­பட்ட வேலை­கள் உள்­ளன. அவற்­றில் பெரும்­ப­குதி, கிட்­டத்­தட்ட 95 விழுக்­காடு நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்ப வல்­லு­நர்­க­ளுக்­கானவை (பிஎம்­இடி).

எஸ்ஜி ஒற்­றுமை வேலை­கள், திறன்­க­ளுக்­கான தொகுப்­புத்­திட்­டத்­தின் கீழ் ஏப்­ரல் முதல் இந்த மாத தொடக்­கம் வரை­யில் ஐசிடி துறை­யில் ஏறக்­கு­றைய 7,190 பேர் வேலை­கள், பயிற்சி மற்­றும் பயிற்சி பத­வி­களில் அமர்த்­தப்­பட்­ட­தற்­குப் பிற­கான வேலை வாய்ப்பு இது என்று மனி­த­வள அமைச்சு மற்­றும் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் (ஐஎம்­டிஏ) நேற்று வெளி­யிட்ட வேலை நில­வர அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அவர்­களில் சுமார் 2,160 பேருக்கு வேலை கிடைத்­தது. இவர்­களில் 85 விழுக்­காட்­டி­னர் பிஎம்­இடி பிரி­வி­னர். மேலும் 5,030 பேர் வேலை இணைப்பு, பயிற்சி மற்­றும் பயிற்சி வாய்ப்­பு­க­ளைப் பெற்­ற­னர்.

இது­வ­ரை­யில், எஸ்ஜி ஒற்­றுமை வேலை­கள், திறன்­க­ளுக்­கான தொகுப்­புத்­திட்­டத்­தின் கீழ் அதிக வேலை­வாய்ப்­பு­க­ளைக் கொண்ட துறை இது என்று மனி­த­வள அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ தெரி­வித்­தார்.

வேலை­வாய்ப்­பு­களில் 30 விழுக்­காடு ‘இல­கு­வான தொழில்­நுட்ப’ பணி­கள். ஏனைய வேலை­க­ளுக்கு ஆழ­மான தொழில்­நுட்­பத் திறன்­கள் தேவை. ஐசிடி பின்­னணி அல்­லது அனு­ப­வம் இல்­லாத விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு பொருத்­த­மான இல­கு­வான தொழில்­நுட்ப வேலை­களில், வாடிக்­கை­யா­ளர் மேலா­ளர், மின்­னி­லக்க விளம்­பர நிபு­ணர் உள்­ளிட்ட வேலை­கள் உள்ளன என்று அறிக்கை தெரி­வித்­தது. இந்த வேலை­கள் தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பத் துறைக்கு வாழ்க்­கைத்­தொ­ழிலை மாற்ற விரும்­பும் பணி­யி­டைக்­கால நபர்­களை அதி­கம் ஈர்க்­கக்­கூ­டும்.

மின்­னி­லக்­கம் வழி விளம்­ப­ரப்­படுத்­தல் (டிஜிட்­டல் மார்க்­கெட்­டிங்), மென்­பொ­ருள் பொறி­யி­யல், இணையப் பாது­காப்பு போன்ற துறை­களில் மனி­த­வ­ளத்­திற்­கான வலு­வான தேவை உள்­ளது. அதே­போல் வர்த்­த­கங்­களை மின்­னி­லக்க உரு­மாற்­றத்தை முன்­னெ­டுக்­கும் தலை­வர்­களும் தேவை என்று முக­வை­கள் மேலும் தெரி­வித்­தன. வளர்ந்து வரும் இந்தத் தேவை­யைப் பூர்த்தி செய்ய, ஊழி­ய­ரணி மறு­தி­றன் பெற்று மாற்­றம் பெற வேண்­டும். 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து, அதி­க­மான உள்­ளூர்­வா­சி­கள் ஐசிடி துறை­யில் வேலை­களைப் பெற்­றுள்­ள­னர். உள்­ளூர் மக்­க­ளின் வேலை­வாய்ப்பு 17,000 அதி­க­ரித்­துள்­ளது. இது இத்­து­றை­யின் மொத்த வேலை­வாய்ப்­பான 190,200ல் 71 விழுக்­காடு என்று மனி­த­வள அமைச்­சும் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் தெரி­வித்­துள்­ளன.

பொரு­ளி­ய­லில் ஏனைய துறை­களில் செயல்­படும் தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்ப வல்­லு­நர்கள் இதில் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்­றும் அது குறிப்­பிட்­டது.

இந்­தத் துறை­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் வேலை வாய்ப்­பு­க­ளைப் பெற உத­வும் வகை­யில் அர­சாங்­க­மும் தொழில்­து­றை­யும் மும்­முனை அணு­கு­மு­றையை முன்­வைத்­துள்­ளன.

ஒரு வழி, புதிய ஊழி­யர்­களை பணி­ய­மர்த்தி, பயிற்­று­விக்­கும் திட்­டங்­களில் ஈடு­ப­டுத்­து­வ­தும் ஏற்­கெ­னவே உள்ள பணி­யா­ளர்­களுக்கு மறு­தி­றன் பயிற்­சி­களை அளிப்­ப­தும் ஆகும். மற்­றோர் அணு­கு­முறை நிறு­வ­னம் சார்ந்த வேலைப் பயிற்சி, இணைப்­புத் திட்­டங்­களை, குறிப்­பாக அனு­ப­வம் இல்­லா­த­வர்­க­ளுக்கு வழங்­கு­வ­தா­கும். சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் திறன் தேவை­களை நிறைவு செய்­யும் திட்­டங்­களும் உள்­ளன. இத்­த­கைய நிறு­வ­னங்­கள் பல்­வேறு தொழில்­முறை மாற்­றுத் திட்­டங்­களில் பங்­கேற்­றுள்­ளன.

கொவிட்-19 பொரு­ளி­ய­லை­யும் ஊழி­யர் சந்­தை­யை­யும் சீர்­கு­லைத்­துள்ள அதே­வே­ளை­யில், மின்­னிலக்­கத் தொழில்­நுட்­பப் பயன்­பாட்­டை­யும் துரி­தப்­ப­டுத்­தி­யுள்­ளது. இது புதிய வேலை­களை உரு­வாக்­கு­வ­தற்­கும் தக­வல்­தொ­டர்பு தொழில்­நுட்­பத் துறை­யில் மனி­த­வள தேவை அதி­க­ரிப்­ப­தற்­கும் வழி­வ­குத்­தது.

தமிழ் முரசு இணையப்பக்கத்தில் 10,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புச் செய்திகள். மேலும் அறிய: https://www.tamilmurasu.com.sg/jobs

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!