88 நன்கொடையாளர்களுக்கு ‘மரபுடைமையின் புரவலர் விருது’

மர­பு­டைமை தொடர்­பில் 2019ஆம் ஆண்­டில் $8.67 மில்­லி­யன் மதிப்­பிலான நன்­கொடை பங்­க­ளிப்­புக்­காக நேற்று நடை­பெற்ற ‘2019 மர­பு­டை­மை­யின் புர­வ­லர் விருது’ நிகழ்ச்­சி­யில், 88 நன்­கொ­டை­யா­ளர்­கள் சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

நல்­லா­த­ரவு, ரொக்க நன்­கொடை, கலைப்­பொ­ருள் அன்­பளிப்­பு­கள் அல்­லது கடன்­கள் என அளிக்­கப்­பட்ட அனைத்து நன்­கொடை­களும் 2018ஆம் ஆண்­டில் வழங்­கப்­பட்ட நன்­கொ­டை­யைக் காட்­டி­லும் 33% அதி­கம் என்று தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் கூறி­யது. நேற்று நடை­பெற்ற மெய்­நி­கர் நிகழ்ச்­சி­யில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் கலந்­து­கொண்­டார்.

“உங்­க­ளின் ஆத­ர­வால் நம் பன்­முக மர­பு­டை­மையை நம்­மால் தொடர்ந்து அனு­ப­விக்­க­வும் பாராட்­ட­வும் முடி­யும்,” என்று நன்­கொ­டை­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறி­னார்.

தம்­மு­டைய பரம்­பரை உடை­மை­களை இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­திற்­குக் கட­னா­கத் தந்­துள்ள திரு பால் சுப்­ர­ம­ணி­யத்­திற்கு நிகழ்ச்சி­யின்­போது ‘மர­பு­டை­மை­யின் ஆத­ர­வா­ளர் விருது’ வழங்­கப்­பட்­டது.

தமது உற­வி­னர்­கள், மூதா­தை­யர்­கள் ஆகி­யோரின் கதை­கள், சிங்­கப்­பூ­ரில் குறைந்த எண்­ணிக்­கை­யில் வசிக்­கும் இலங்­கைத் தமி­ழர்­க­ளுக்கு உற்­சா­கத்தை அளிக்­கும் என்ற எண்­ணத்­தில் உடை­மை­க­ளைக் கட­னாக அளித்­த­தாக அவர் கூறி­யி­ருந்­தார்.

“ஒவ்­வொ­ரு­வ­ரும் யாரோ ஒரு­வ­ரின் வம்­சா­வளி. இன்று நாம் யார் என்­ப­தற்கு அடை­யா­ளத்தை நம் வர­லாறு கூறும். அதனால் அதில் உள்ள நன்­மையை நாம் பயன்­படுத்­திக்கொள்வது முக்­கி­யம்,” என்­றார் வழக்­க­றி­ஞ­ரான திரு பால்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!