அதிக பாலர் பள்ளிகளில் குறைந்த கட்டணம்

அர­சாங்க உத­வி­யு­டன் கூடிய திட்­டத்­தில் அதி­க­மான பாலர் பள்­ளி­கள் இணை­ய­வுள்­ளன. இத­னால், அடுத்த ஆண்­டில் இருந்து அதி­க­மான பெற்­றோர் தங்­கள் குழந்­தை­களின் பாலர் கல்­விக்­குக் குறைந்த கட்­ட­ணம் செலுத்­து­வர்.

மொத்­தம் 29 நிறு­வ­னங்­க­ளால் நடத்­தப்­படும் 324 குழந்­தைப் பரா­மரிப்பு நிலை­யங்­கள், 2021 ஜன­வரி முதல் புதிய பங்­காளி நிறு­வ­னத் தவ­ணைக் காலத்­தில் பங்­கெ­டுக்க உள்­ளன. இது, நடப்­புத் தவ­ணைக் காலத்­தில் பங்­கெ­டுத்­துள்ள நிலை­யங்­க­ளைக் காட்­டி­லும் 30% அதி­கம் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி குறிப்­பிட்­டார்.

அத்­திட்­டத்­தின் மூலம் இப்­போது 20,000 குழந்­தை­கள் பலன்­பெற்று வரும் நிலை­யில், அடுத்த ஆண்­டில் அந்த எண்­ணிக்கை 27,000க்கும் அதிகமாக இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வரும் 2025ஆம் ஆண்­டிற்­குள் பாலர் பள்­ளி­களில் அர­சாங்க ஆத­ர­வு­டன் கூடிய இடங்­க­ளின் எண்­ணிக்­கை 80 விழுக்­கா­டாக உயர்த்­தப்­படும் என்று அர­சாங்­கம் கடந்த ஆண்­டில் தெரி­வித்து இருந்­தது. அதற்­கே­து­வாக, அடுத்த ஆண்­டில் இருந்து பங்­காளி நிறு­வனத் திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­ட இருக்கிறது. 2019ல் அவ்­வி­கி­தம் 50 விழுக்­கா­டாக இருந்­தது.

கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்­கிய பங்­காளி நிறு­வ­னத் திட்­டத்­தின் முதல் தவ­ணைக் காலத்­தில் 23 பங்­காளி நிறு­வ­னங்­களைச் சேர்ந்த 250 நிலை­யங்­கள் பங்­கெ­டுத்­துள்­ளன. இவ்­வாண்டு டிசம்­ப­ரு­டன் அந்­தத் தவ­ணைக் காலம் முடி­விற்கு வரு­கிறது.

கட்­ட­ணத்­தைக் குறை­வாக வைத்­தி­ருக்க பங்­காளி நிறு­வ­னங்­கள் அர­சாங்க நிதி­யு­த­வி­யைப் பெறு­கின்­றன. கட்­டண உச்ச வரம்­பிற்­கும் அவை இணங்கவேண்­டும்.

பங்­காளி நிறு­வ­னத் திட்­டத்­தின் இரண்­டாம் தவ­ணைக் காலத்­தில், நிலை­யங்­கள் முழு­நாள் குழந்­தைப் பரா­ம­ரிப்­புச் சேவைக்­கான மாதக் கட்­ட­ண­மாக அதி­க­பட்­சம் $760 வசூ­லிக்க முடி­யும். இப்­போது அந்த உச்ச வரம்பு $800ஆக இருக்­கிறது.

முழு­நேர கைக்­கு­ழந்­தைப் பரா­மரிப்­புச் சேவைக்­கான மாதாந்­தி­ரக் கட்­ட­ணம் இப்­போது $1,400ஆக இருக்­கும் நிலை­யில், அது அடுத்த ஆண்­டில் இருந்து $1,330ஆகக் குறைக்­கப்­படும். இவ்­விரு கட்­ட­ணங்­களும் ஜிஎஸ்­டியை உள்­ள­டக்­க­வில்லை.

பாசிர் பாஞ்­சாங்­கில் உள்ள ‘பிஸி பீஸ் லேனிங் விஷன் அட் இன்­டர்­லோக்­கல்’ பாலர் பள்­ளிக்கு நேற்று வரு­கை­பு­ரிந்த அமைச்­சர் மச­கோஸ், தரம், அணு­கக்­கூ­டிய தன்மை, கட்­டுப்­ப­டி­யா­கும் தன்மை போன்ற கார­ணி­க­ளின் அடிப்­ப­டை­யில் பங்­காளி நிறு­வ­னங்­கள் தேர்வு செய்­யப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, அர­சாங்க ஆத­ர­வு­டன் கூடிய பாலர் பள்­ளி­க­ளி­லும் கட்­டண உச்ச வரம்பு குறைக்­கப்­படும் என்று பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இடைப்­ப­ருவ நோக்­கில், முழு­நாள் பாலர் பள்­ளிச் செல­வு­கள் கிட்­டத்­தட்ட 300 வெள்­ளி­யா­கக் குறைக்­கப்­படும் என அவ்­வ­மைப்பு தெரி­வித்­தது.

ஒட்­டு­மொத்­தத்­தில், பாலர் பரு­வத் துறைக்­காக ஆண்­டு­தோ­றும் அர­சாங்­கம் செல­வி­டும் தொகை 2018ல் கிட்­டத்­தட்ட $1 பில்­லி­ய­னாக இருந்த நிலை­யில், இன்­னும் சில ஆண்­டு­களில் அது இரு­ம­டங்­கிற்கு மேல் உயரலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!