லாவ் பா சாட்டில் ஃபேர்பிரைஸ் குழுமத்தின் புதிய உணவுக்கூடம்

புதுப்பிப்புப் பணிகள் இடம்பெற்று வரும் மத்திய வர்த்தக வட்டார உணவங்காடி நிலையத்தில் ‘ஃபுட் ஃபோக்ஸ் அட் லாவ் பா சாட்’ எனும் புதிய உணவுக்கூடத்தை ஃபேர்பிரைஸ் குழுமம் இன்று (நவம்பர் 26) திறந்தது. மொத்தம் 7,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள அந்த உணவுக்கூடமானது, பத்து உணவு, பானக் கடைகளைக் கொண்டுள்ளது.

அத்துடன், 120 வணிகச் சின்னங்களுக்குரிய, 800க்கும் அதிகமான உணவு சார்ந்த பொருள்கள் இருக்கும் ஒரு சில்லறை வர்த்தக நிலையமும் அங்கு அமைந்துள்ளது. அவற்றில் 70 விழுக்காட்டுப் பொருள்கள் உள்ளூர் தயாரிப்புகள் என்றும் 40 விழுக்காட்டுப் பொருள்கள் இங்குள்ள முக்கிய பேரங்காடிகளில்கூட கிடைக்காது என்றும் சொல்லப்பட்டது.

லாவ் பா சாட்டின் மற்ற பகுதிகள் 2021ல் திறக்கப்படும்.

உள்ளூர் வணிகச் சின்னப் பொருள்களை ஆதரிக்கும் நோக்கில் அண்மையில் அறிவிக்கப்பட்ட ‘மேட் வித் பேஷன்’ தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, பத்து உள்ளூர் வணிகச் சின்னப் பொருள்கள் ஃபுட் ஃபோக்சில் இடம்பெறும் எனக் கூறப்பட்டது.

“இப்போதைய கொவிட்-19 சூழலில் உணவு வர்த்தகங்களின் கவலைகளையும் அவை எதிர்கொண்டு வரும் சவால்களையும் நாங்கள் அறிந்துள்ளோம். இவ்வேளையில், உள்ளூர் உணவு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கவும் அவை எதிர்காலத்தில் வர்த்தகத்தை மேம்படுத்தத் திட்டமிடவும் ஃபேர்பிரைஸ் பல்வேறு ஆதரவுத் திட்டங்களைச் செயல்படுத்தும்,” என்று ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!