நிதித்துறையில் 1,800 வேலைகள்

நிதித்­து­றை­யில் சிங்­கப்­பூ­ரர்­களை மூலா­தா­ர­மா­கக் கொண்ட ஊழி­யர்­அணியை உரு­வாக்கி, தக்­க­வைக்க சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கூடு­தல் நட­வ­டிக்­கை­களை அறி­வித்­துள்­ளது.

2021 ஜூன் மாதத்­திற்­குள் 1,800 புதிய வேலை­களை உரு­வாக்­க­வும் 2,000 பயிற்சியிடங்­க­ளை­யும் வழங்க நிதித்­துறை திட்­ட­மிட்டு வரு­கிறது என்று ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன் தெரி­வித்து இருக்கிறார்.

ஆக அதி­க­மாக நிதித் தொழில்­நுட்­பத் துறை­யில் 880 புதிய வேலை­கள் உரு­வாக்­கப்­படும் என்று நாணய ஆணை­ய­மும் ‘ஐபி­எஃப்’ எனும் வங்­கி­யி­யல், நிதி நிலை­ய­மும் இணைந்து நேற்று நடத்­திய இணை­ய­வ­ழிக் கருத்­த­ரங்­கின்­போது திரு ரவி மேனன் குறிப்­பிட்­டார்.

நிதி நிலை­யங்­களில் வேலை அனு­ப­வப் பயிற்சி பெறும் சிங்­கப்­பூர் பட்­ட­தா­ரி­க­ளுக்­காக புதிய வேலை-கல்வி ஆத­ர­வுத் திட்­டத்தை ஆணை­யம் தொடங்­கும். பயிற்­சிக் காலத்­தில் வழங்­கப்­படும் உத­வித்­தொ­கை­யில் 80 விழுக்­காட்டை, அதி­க­பட்­ச­மாக மாதத்­திற்கு 1,000 வெள்­ளியை ஆணை­யம் வழங்­கும்.

நிதித்­துறை வேலை­க­ளுக்­குத் தயார்­நி­லை­யில் இருக்­கும் பட்­ட­தாரி­களை உரு­வாக்­க­வும் அந்தத் து­றை­யில் சிங்­கப்­பூர் திற­னா­ளர்­களை உரு­வாக்­க­வும் இப்­பு­திய திட்­டம் இலக்கு கொண்­டுள்­ளது.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் வேலை-கல்வி பட்­டத் திட்­டத்­தின் ஒரு பகு­தியே இந்­தப் புதிய திட்­டம்.

நிறு­வ­னத்­தின் ஆத­ர­வு­டன் கூடிய பயிற்­சி­யா­ளர்­க­ளுக்­காக இவ்வாண்டு டிசம்­பர் 31ஆம் தேதி­யில் இருந்து அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை ஆறு மாதங்­க­ளுக்கு பயிற்­சி உதவித் தொகை மானி­யத்தை ஆணை­யம் நீட்­டிக்க இருக்­கிறது.

அதே­போல, வங்­கி­யி­யல், நிதி நிலை­ய­மும் தனது ஐந்து விழுக்காடு கூடு­தல் பயிற்­சிக் கட்­டண உதவித்­தொகையை நீட்­டிக்­கும்.

நிதித்­து­றை­யில் உள்­ளூர்­வா­சி­களின் வேலைத் தகு­தியை மேம்­படுத்­தும் பொருட்டு, மேம்­ப­டுத்­தப்­பட்ட பயிற்சி ஆத­ரவு நட­வ­டிக்­கை­களை நிறு­வ­னங்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என ஆணை­யம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

கொவிட்-19 நோய்ப் பர­வல் கால­கட்­டத்­தில் வேலை­களை உரு­வாக்கு­வது என்­பது மையப் பொரு­ளி­யல் சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளது என்று திரு ரவி மேனன் குறிப்­பிட்­டார்.

அத்­து­டன், நல்ல வேலை­களை உரு­வாக்­கு­வது மிக முக்­கி­யம் என்­பதை அர­சாங்­கம் எப்­போ­துமே உணர்ந்­துள்­ளது என்­றும் அத­னால்­தான் ஒவ்­வொரு நெருக்­க­டி­யின்­போ­தும் வேலை­க­ளைத் தக்­க­வைக்­க­வும் சிங்­கப்­பூ­ரர்­களை வேலை­யில் இருக்­கச் செய்­ய­வும் அர­சாங்க ஆத­ரவு நட­வ­டிக்­கை­கள் கவ­னம் செலுத்­து­கின்­றன என்­றும் அவர் கூறி­னார்.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூர் நிதித்­து­றை­யில் 170,000க்கும் அதி­க­மானோர் பணி­யாற்றி வந்­த­னர். 2015 முதல் 2019 வரை அத்­து­றை­யில் 22,000 வேலை­கள் உரு­வாக்­கப்­பட்­டன. அவற்­றில் 70% வேலை­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் வச­மா­கின.

இவ்­வாண்­டின் முற்­பா­தி­யில் நிதித்­து­றை­யில் 1,900 வேலை­கள் உரு­வாக்­கப்பட்டன என்றும் அவை­ அ­னைத்­தும் உள்­ளூர்­வா­சி­க­ளைச் சென்று சேர்ந்தன என்றும் திரு ரவி மேனன் தெரி­வித்தார்.

தமிழ் முரசு இணையப் பக்கத்தில் 14,000க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புத் தகவல்கள்! மேலும் அறிய: https://www.tamilmurasu.com.sg/jobs

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!