பொருள் வாங்குவதற்காக பலரும் 'பிளாக் ஃபிரைடே' தினத்துக்காக ஒவ்வோர் ஆண்டும் காத்திருப்பது வழக்கம். இவ்வாண்டு கொவிட்-19 நெருக்கடி காலத்தைக் கருதி பல 'பிளேக் ஃபிரைடே' விற்பனைகள், இணையத்திற்கு மாறின.
இருப்பினும், இணையத்தில் தங்களின் பொருள் வாங்கும் வேட்கையை முடித்துக்கொள்ளாமல் பலர் ஆர்ச்சர்ட் சாலை கடைகளுக்கு நேற்று காலை நேரடியாகச் சென்றுவிட்டனர்.
அமெரிக்காவில்தான் முதன்முதலாக 'பிளேக் ஃபிரைடே' விற்பனைகள் தொடங்கின. கிறிஸ்மஸ் விழாக்காலத்துக்கான விற்பனைகள் தொடங்கியுள்ளதைக் குறிக்க, இந்த தினத்தை அமெரிக்கர்கள் ஒதுக்கியுள்ளனர்.
இவ்வாண்டு சிங்கப்பூரில் 'பிளேக் ஃபிரைடே' விற்பனைகள் நடந்தபோதும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் பரபரப்பு குறைவாகவே இருந்தது.
முன்பை போல் வரிசைகள் நீண்டுகொண்டு போகவில்லை; கடைகள் நெரிசலுடன் காணப்படவில்லை. இந்நிலையில் அதன் இறுதி 'பிளேக் ஃபிரைடே' விற்பனையை ஆர்ப்பாட்டமில்லாது 'ராபின்சன்ஸ்' நிறுவனமும் நடத்தியது.


