குழந்தைப் பராமரிப்பில் சிறந்தோங்கும் ஜசிந்தா முன்னாளில் தாதி... இப்போது...

குழந்தைப் பராமரிப்பில் சிறந்தோங்கும் ஜசிந்தா முன்னாளில் தாதி... இப்போது...

2 mins read
e0e708c1-3717-403e-8928-89eee0d772a9
பாலர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பதோடு நிறுத்திவிடாமல் ஒரு வி‌‌ஷயத்தைச் செய்வதால் அதன் பின்விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைப் பக்குவமாக எடுத்துரைப்பார் ஜசிந்தா. படம்: Tots and Teddies -

தொழில்­நுட்ப கல்­விக் கழ­கத்­தில் (கிழக்குக் கல்­லூரி) தாதி­மைத் துறை­யில் சான்­றி­தழ் பெற்­று­விட்டு சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் ஈராண்­டு­க­ளாக அறுவை சிகிச்சைப் பிரி­வில் தாதி­யாகப் பணி­யாற்­றி­ய­வர் குமாரி ஜெ.ஜசிந்தா, 27.

சிறு வய­தி­லி­ருந்தே பிள்­ளை­களு­டன் இணைந்து செயல்­ப­டு­வது என்­றால் ஜசிந்­தா­வுக்கு அள­வில்லா ஆனந்­தம்.

மருத்­துவ சிகிச்­சைக்­காக வரும் பிள்­ளை­க­ளு­டன் இவர் அன்­பு­டன் உரையாடி அவர்­களை மகிழ்­விக்க முற்­ப­டு­வார். ஆனால் அவர்­களை நோயா­ளி­க­ளாகப் பார்ப்­பது இவ­ரது மன­திற்கு ஏற்­றுக்­கொள்­ளும் வித­மாக இல்லை.

மகிழ்ச்­சி­யான சூழ­லில் அவர்­களு­டன் இணைந்து செயல்­பட வேண்­டும் என்ற எண்­ணம், ஜசிந்­தாவை ஏறக்­கு­றைய ஆறு ஆண்டு­களுக்கு முன்­னர் வேலை மாற்­றம் செய்­யத் தூண்­டி­யது.

வேலை தேடும் இணை­யத் தளத்­தில் பாலர் பள்ளி துணை ஆசி­ரி­ய­ருக்­கான வேலைக்கு விண்­ணப்­பித்து புதிய துறை­யில் இவர் கால்­பதித்­தார்.

அங்கு மழ­லை­யர்­க­ளுக்கு வாசிக்­க­வும் எழு­த­வும் இவர் சொல்­லிக் கொடுத்­தார்.

புதிய சவாலுக்கு இணங்க, இரண்டு வய­திற்­கும் கீழ் உடைய குழந்­தை­க­ளைப் பரா­ம­ரிக்­கும் Tots and Teddies எனும் குழந்தை பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் இவர் வேலைக்­குச் சேர்ந்­தார்.

குழந்­தை­க­ளைப் பராம­ரிப்­ப­தற்­கான சான்­றி­த­ழுக்­குப் பயின்று, அவர்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் ஆசி­ரி­ய­ராக கடந்த மூன்று ஆண்­டு­களாக இவ­ரது பய­ணம் நீடிக்­கிறது.

குறு­கிய காலத்­தி­லேயே தனித்­துவ வேலை­யிடப் பண்­பு­கள் இவ­ரி­டம் வெளிப்­பட்­டன. உதா­ர­ணத்­திற்கு, குழந்­தை­க­ளு­டன் அணுக்­க­மாகச் செயல்­ப­டு­வ­து இவ­ருக்கு இயல்­பான ஒன்­றாக அமைந்­தது.

குழந்­தை­க­ளி­டம் என்ன செய்ய வேண்­டும் என்­பதை மட்­டும் சொல்­லா­மல் ஒரு வி‌‌ஷ­யத்­தைச் செய்­வ­தால் அதன் பின்­வி­ளை­வு­கள் எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­கும் என்­ப­தைப் பக்­கு­வ­மாக எடுத்­துச் சொல்­வார் ஜசிந்தா.

பெற்­றோ­ரி­டம் குழந்­தை­க­ளின் மேம்­பாடு, தேவை குறித்து அவ்வப்­போது பகிர்ந்­து­கொள்­ளும் ஜசிந்­தா­வுக்கு, இவ்­வாண்­டின் நம்­பிக்­கை­ய­ளிக்­கும் ஆரம்­ப­கால பாலர் கல்வி ஆசி­ரி­யர் விருது வழங்­கப்­பட்­டது.

ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ மேம்­பாட்டு வாரி­யம் 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து வழங்­கும் இந்த வரு­டாந்­திர விரு­து­களில் இவ்­வாண்டு மொத்­தம் 25 சிறந்த ஆரம்­ப­கால கல்வி ஆசி­ரி­யர்­களும் பள்­ளி­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

"குழந்­தை­கள் எனது பரா­ம­ரிப்­பில் வளர்ந்து முதல் வார்த்­தை­கள் சொல்­லும்­போது அல்­லது சுய­மாக உணவு உண்­ணும்­போது, பணியை நன்கு ஆற்­றி­யுள்­ளோம் என்ற திருப்தி கிடைக்­கிறது.

"கொடுக்­கப்­பட்ட பணி­யைச் சரி­யாக செய்­கி­றேன் என்­ப­தற்கு இவ்­வி­ருது ஓர் அங்­கீ­கா­ரம். ஆரம்­ப­கால கல்­வித் துறை­யில் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொண்டு குழந்­தை­க­ளைப் பற்றி இன்­னும் ஆழ­மாக புரிந்­து­கொள்ள முனை­வது எனது இலக்கு," என்று ஜசிந்தா சொன்­னார்.

குறிப்புச் சொற்கள்