சுடச் சுடச் செய்திகள்

இணையம் வழி வாகன விபத்து தகவல் அளிக்கும் முறை அறிமுகம்

வாகன விபத்து குறித்து தகவல் அளிப்பதை எளிதாக்க சிங்கப்பூர் பொது காப்புறுதிச் சங்கம் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாகன விபத்து குறித்து இணையத்தில்  தகவல் அளிக்கலாம். இது இன்று (நவம்பர் 30) முதல் நடப்புக்கு வருகிறது.

இதற்கு முன்பு இருந்த வாகன விபத்து கோரிக்கைகள் கட்டமைப்புக்குப் பதிலாக இந்தப் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய முறையின்கீழ் வாகனங்களைப் பழுதுபார்ப்பவர்கள் விபத்து அறிக்கைகளைப் பெற வாகன உரிமையாளர்கள் இணையம் மூலம் பாதுகாப்பான முறையில் அனுமதிக்கலாம் என்று சங்கம் தெரிவித்தது. இந்தச் சேவை 24 மணி நேரமும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைத் தடையில்லாமல் பெற மின்னஞ்சல் முகவரியை வழங்குமாறு வாகன உரிமையாளர்களுக்குச் சங்கம் நினைவூட்டுகிறது. அப்போதுதான் அவர்களைத் தொடர்புகொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  

புதிய முறையின்கீழ் ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் சாத்தியமாகின்றன. இயைணம் வழி ஜைரோ, டைரெக்ட் டெபிட், நெட்ஸ் அட்டைகளை ஸ்கேன் செய்தல், பே நவ் கியூஆர் குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon