600 மின்சார வாகன மின்னூட்டு நிலையங்கள் உருவாக்க ஏலக்குத்தகை

வாக­னம் நிறுத்­து­மி­டங்­களில் மின்­சார வாக­னத்­துக்­கான மின்­னூட்டு நிலை­யங்­களை உரு­வாக்­கும் திட்­டத்­துக்­கான ஏலக் குத்­தகை தொடர்­பில் நிறு­வ­னங்­களுக்கு நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அழைப்பு விடுத்­துள்­ளது. அதன்­படி மின்­சார வாக­னங்­க­ளுக்­கு­ரிய 600 மின்­னூட்டு நிலை­யங்­கள் பொருத்­தப்­படும்.

இத்­த­கைய ஏலக் குத்­தகை தொடர்­பாக ஆணை­யம் ஏலத்­துக்கு அழைப்­பது இதுவே முதல் முறை என்று நம்­பப்­ப­டு­கிறது. இங்­குள்ள 200க்கும் மேற்­பட்ட பொது கார்­நி­றுத்­து­மி­டங்­களில் 600 மின்­னூட்டு இடங்­கள் அமைந்­தி­டும் என்று அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

ஏலக் குத்­த­கையை வெற்­றி­க­ர­மா­கக் கைப்­பற்­று­வோர், மின்­னூட்டு நிலை­யங்­க­ளைப் பொருத்­தும் பணியை 2022ஆம் ஆண்­டுக்­குள் முடித்­து­விட வேண்­டும் என்று ஆணை­யம் கூறி­யது.

“மேலும் சுத்­த­மான எரி­சக்தி வாக­னங்­க­ளின் பயன்­பாட்­டைத் துரி­தப்­ப­டுத்த அடுத்த 10 ஆண்டு­களில் 28,000 மின்­னூட்டு நிலை­யங்­களை உரு­வாக்­கும் நம் நாட்டின் குறிக்­கோ­ளுக்கு இது முக்­கி­ய­மா­ன­தொரு முதல் படி,” என்­றது ஆணை­யம்.

மின்­சார வாகன மின்­னூட்டு பகு­தி­க­ளைப் பொருத்­தும் திட்­டங்­களில் இது­வரை ஆக உயர்ந்த லட்­சி­யத்­து­டன் செயல்­படும் நிறு­வனம் ‘சன்­சிப் குரூப்’.

2030ஆம் ஆண்­டுக்­குள் இங்கு 10,000 மின்­னூட்டு நிலை­யங்­களைப் பொருத்­து­வ­தைத் தன் குறிக்­கோ­ளா­கக் கொண்­டுள்­ள­தாக செப்­டம்­பர் மாதத்­தில் நிறு­வனம் அறி­வித்­தது.

இதை­ய­டுத்து போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், தமது ஃபேஸ்புக் பதிவில் இதன் தொடர்­பில் பதி­விட்­டார்.

‘மின்­சார வாக­னங்­க­ளுக்கு முன்­கூட்­டியே பதிவு செய்­து­கொள்­வ­தற்­கான பதி­வுக் கட்­டண ஊக்­கு­விப்­புத் தொகை’ மூலம் வரித் தள்­ளு­படி உள்­ளது. இத்­து­டன் அண்­மை­யில் மாற்­றி­ய­அமைக்­கப்­பட்ட ‘வாகன வாயு வெளி­யேற்­றம் குறித்த திட்­ட­மும்’ அறி­விக்­கப்­பட்­டது. இச்­ச­லு­கை­களைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு மேலும் அதி­க­மான ஓட்­டு­நர்­கள் மின்­சார வாக­னங்­க­ளுக்கு மாற ஊக்­கம் பெறு­வர் என அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

“இத்­து­டன் நாம் நின்­று­விட மாட்­டோம். தொழில்­நுட்­பம் மாறி­வரு­கிறது. சிங்கப்பூரில் நம் உத்தி­மு­றையை நாம் மறு­ஆய்வு செய்து­கொண்டே இருப்­போம். லட்­சி­யத்­து­டன் செயல்­ப­டும்­போது திட்­டங்­கள் வளர்ச்சி காணும் என்­பதை நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன்,” என்­றார் திரு ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!