பிரதமர் லீ: என் உடன்பிறப்புகளுடனான எனது அணுகுமுறையே வேறு

தமது பெற்­றோர் வாழ்ந்த எண் 38, ஆக்ஸ்லி ரோடு குடும்ப வீடு தொடர்­பில் தமது உடன்­பி­றப்­பு­கள் கூறிய அவ­தூ­று­க­ளுக்கு எதி­ராக பிர­த­மர் லீ சியன் லூங் வழக்கு தொடுக்­க­வில்லை.

இதை ஒரு சாக்­காக எடுத்­துக்­கொண்டு, அவர்­கள் தமக்கு எதி­ரா­கக் கூறிய கருத்­து­க­ளைப் பயன்­படுத்தி தமது நற்­பெ­ய­ருக்கு யார் வேண்­டு­மா­னா­லும் களங்­கம் ஏற்­படுத்தி விட­லாம் என்று அர்த்­த­மா­காது என்று திரு லீ, நேற்று உயர் நீதி­மன்­றத்­தில் நடை­பெற்ற அவ­தூறு வழக்­கில் சாட்­சி­ய­ம­ளித்­த­போது கூறி­னார்.

தமக்கு எதி­ராக அவ­தூறு கூறும் செய்­தி­களை வெளி­யிட்­ட­தற்­காக ‘தி ஆன்­லைன் சிட்­டி­ஸன்’ இணை­யத் தளத்­தின் ஆசி­ரி­யர் திரு டெரி சூவுக்கு எதி­ராக திரு லீ அவ­தூறு வழக்கு தொடுத்­தி­ருக்­கி­றார்.

அதன் தொடர்­பி­லான ஒரு வார நீதி­மன்ற விசா­ர­ணை­யின் முதல் நாளில் திரு லீ நேற்று நீதி­மன்­றம் வந்­தார்.

“ஆக்ஸ்லி ரோடு சொத்­தின் விவ­கா­ரம் தொடர்­பில் எங்­கள் குடும்­பத்­தி­ன­ருக்கு இடையே ஏற்­பட்­டது பொது­வான ஒரு குடும்பச் சண்டை.

“அதன் தொடர்­பில் நானோ எனது மனைவி ஹோ சிங்கோ, என் சகோ­த­ரர் லீ சியன் யாங், சகோ­தர் லீ வெய் லிங் இரு­வர் மீதும் எந்த பகை­மையையும் வெளிப்­ப­டுத்­த­வில்லை,” என்று பிர­த­மர் கூறி­னார்.

தி ஆன்­லைன் சிட்­டி­ஸன் இணை­யத் தளம் கடந்த ஆண்டு ஆகஸ்­டில் வெளி­யிட்ட ஒரு கட்­டு­ரைக்கு, ‘பிர­த­மர் லீயின் மனைவி ஹோ சிங், குடும்ப உறுப்­பி­னர்­களு­டன் உற­வு­க­ளைத் துண்­டித்­துக்­கொள்ள அவர்­கள் தொடர்­பான கட்­டு­ரை­களை யோசிக்­கா­மல் வெளி­யி­டு­கி­றார்’ என்று தலைப்பு கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்­தக் கட்­டு­ரை­ பிர­த­ம­ரின் சகோ­தரி டாக்­டர் லீ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் எழு­திய பதிவை மேற்­கோள் காட்­டி­யது. அதில், சிங்­கப்­பூரின் முத­லா­வது பிர­த­ம­ரும் தங்­கள் தந்­தை­யு­மான அம­ரர் லீ குவான் இயூ­வி­டம் 38 ஆக்ஸ்லி ரோடு வீடு அர­சி­த­ழில் இடம்­பெற்­றுள்­ளது என்று தவ­றான தக­வ­லைத் தெரி­வித்து ஏமாற்றி விட்­டார் என்று டாக்­டர் லீ எழு­தி­யி­ருந்­தார்.

“தி ஆன்­லைன் சிட்­டி­ஸன் கட்­டு­ரை­யில் கூறப்­பட்­டுள்ள கருத்­து­கள் முற்­றி­லும் பொய்­யா­னவை. அதன் மூலம் எங்­கள் கட்­சிக்­கா­ர­ரான திரு லீயின் நற்­பெ­ய­ருக்­கும் மதிப்­புக்­கும் களங்­கம் ஏற்­பட்டு விட்­டது,” என்று பிர­த­ம­ரின் வழக்­கு­ரை­ஞர்­கள் தெரி­வித்­த­னர்.

பிர­த­ம­ரைக் குறுக்கு விசா­ரனை செய்த திரு சூவின் வழக்­கு­ரை­ஞர் திரு லிம் தியென், “பிர­த­ம­ருக்கு எதி­ராக அவ­ரது உடன்­பி­றப்­பு­கள் கூறிய அவ­தூ­று­க­ளுக்கு அவர் சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அதன் கார­ண­மா­கத்­தான் எனது கட்­சிக்­கா­ரர் திரு லீயின் உடன்­பி­றப்­பு­கள் சொன்­ன­தில் உண்­மை­யி­ருக்­க­லாம் என்று நினைத்து அந்­தக் கருத்­து­களை தமது இணை­யத் தளத்­தில் சேர்த்­துக்­கொண்­டார்,” என்­றார்.

அதற்­குப் பதி­ல­ளித்த பிர­த­மர், “யார் எதை வேண்­டு­மா­னா­லும் சொல்­லி­விட முடி­யாது. எனது உடன்­பி­றப்­பு­க­ளு­ட­னான எனது அணு­கு­முறை வேறு­பட்­டது,” என்று வலியுறுத்தினார். நாளை வழக்கு விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!