சுடச் சுடச் செய்திகள்

சாங்கி விமான நிலைய முனையக் கடைகளின் விற்பனை 74% சரிவு; சிரமப்படும் ஜுவல்

ஜுவல் சாங்கி விமான நிலை­யம் கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதம் கோலா­க­ல­மா­கத் திறக்­கப்­பட்­டது. அதைக் கட்டி முடிக்க $1.7 பில்­லி­யன் செல­வா­னது.

திறந்­த­தி­லி­ருந்து ஒவ்­வொரு நாளும் மக்­கள் கூட்­டம் அங்கு அலை­மோ­தி­யது.

ஆனால் ஏறத்­தாழ ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நிலைமை முற்­றி­லும் மாறி­விட்­டது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக விமா­னப் போக்­கு­வ­ரத்­து­டன் வர்த்­த­க­மும் பொழு­து­போக்கு அம்­சங்­களும் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னால் ஜுவல் வளாகம் வெறிச்­சோடிக் கிடக்­கிறது. லாபம் ஈட்­ட­லாம் என மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் கடை­க­ளைத் திறந்த நிறு­வ­னங்­க­ளுக்கு ஏமாற்­ற­ம்தான் மிஞ்­சி­யது.

மக்­க­ளின் வரவு வெகு­வா­கக் குறைந்­தி­ருப்­ப­தால் வர்த்­த­கத்­துக்­குப் பலத்த அடி.

நிலை­மை­யைச் சமா­ளிக்க முடி­யா­மல் அங்­குள்ள சில சில்­லறை, வர்த்­தக நிறு­வ­னங்­கள் வில­கி­விட்­டன.

ஜுவலில் மொத்தம் 280க்கும் மேற்பட்ட உணவு, பானக் கடைகள் உள்ளன. ஜுவ­லின் உணவு நிலை­யத்­தில் கிட்­டத்­தட்ட 15 கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன.

எஞ்­சி­யுள்ள வர்த்­த­கங்­க­ளுக்கும் நட்­டம் ஏற்­பட்­டுள்­ளது. சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வரு­கைக்­காக அவை காத்­தி­ருக்­கின்­றன.

சாங்கி விமான நிலை­யத்­தின் மற்ற முனை­யங்­க­ளி­லும் வர்த்­த­கம் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்­டுக்­கான சில்­லறை வர்த்­த­கம் 74 விழுக்­காடு குறைந்­துள்­ளது.

முனை­யம் 1, 3 ஆகி­யவை மட்­டும் பொது­மக்­க­ளுக்­குத் திறக்­கப்­பட்­டுள்­ளன. பய­ணி­க­ளுக்­கான இடத்­தில் பாதி அளவு கடை­கள் மட்­டுமே திறந்­துள்­ளது.

மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­கான முனை­யம் 2 மூடப்­பட்­டுள்­ளது.

விமா­னச் சேவை­கள் வெகு­வா­கக் குறைந்­தி­ருப்­ப­தால் முனை­யம் 4ல் அவை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்நிலையில், கட்டுப்பாட்டுத் தளர்வின் முதல் கட்டத்தில் சாங்கி விமான நிலையத்துக்கு வந்தோரின் எண்ணிக்கையைவிட தற்போது அங்கு வருவோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருப்பதாக ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பிரிவின் தலைமை நிர்வாகி திருவாட்டி ஹங் ஜீன் தெரிவித்தார்.

“கட்டுப்பாட்டுத் தளர்வுக்கான இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது,” என்றார் திருவாட்டி ஹங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon