உள்ளூரில் சுற்றுலாக்களுக்கு $100 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி முன்பதிவு தொடங்கியது

சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு அர­சாங்­கம் வழங்­கி­யுள்ள ‘சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்றுச்சீட்டு’களைப் பயன்­ப­டுத்தி ஹோட்­டல்­கள், உல்­லா­சத் தளங்­கள், உள்­ளூர் சுற்­று­லாக்­கள் ஆகி­ய­வற்­றுக்கு முன்­ப­திவு செய்­யும் நடை­முறை நேற்று சுமூ­க­மாக தொடங்­கி­யது.

கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் உள்­ளூர் சுற்­றுப்­ப­ய­ணத் துறைக்கு ஆத­ரவு வழங்க, 18 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­து­டைய சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு $100 பெறு­மா­ன­முள்ள சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

முதல் நாளான நேற்று பலர் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள பற்­றுச்­சீட்­டு­க­ளின் முழு மதிப்­பை­யும் பயன்­ப­டுத்­தி­விட்­ட­னர்.

நேற்று நள்­ளி­ரவு முன்­ப­திவு தொடங்­கி­ய­தும் சாங்கி ரெக்­க­மெண்ட்ஸ், குளோ­பல்­டிக்ஸ், டிரே­வ­லோக்கா, டிரிப்.காம், குலூக் ஆகிய இணைய முன்­ப­திவு தளங்­கள், பற்­றுச்­சீட்­டு­கள் செல்­லு­ப­டி­யா­கும் ஹோட்­டல்­கள், உல்­லா­சத் தளங்­கள், உள்­ளூர் சுற்­று­லாக்­கள் ஆகி­ய­வற்றை வெளி­யிட்­டன.

முன்­ப­திவு தொடங்­கி­ய­தும் பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­தி­ய­வர்­களில் திரு­மதி ஏஞ்­சல் ஹோவும் ஒரு­வர். சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம், ரிவர் சஃபாரி ஆகிய உல்­லா­சத் தளங்­க­ளுக்­குச் செல்ல இரு பெரி­ய­வர்­கள், இரு சிறு­வர்­களுக்கு அவர் முன்­ப­திவு செய்­தார். $100 பற்­றுச்­சீட்­டைப் பயன்­படுத்­திய பிறகு திரு­மதி ஹோ $60 செலுத்­தி­னார்.

“என்­னைப் பொறுத்­த­வரை, இரு உல்­லா­சத் தளங்­க­ளுக்­குச் செல்ல நால்­வ­ருக்கு $60 கட்­ட­ணம் என்­பது நியா­ய­மா­னதே. பற்­றுச்­சீட்­டு­கள் இல்­லை­யெ­னில், முழுக் கட்­ட­ணத்­தை­யும் செலுத்தி உல்­லா­சத் தளங்­களுக்கு நாங்­கள் செல்­வது சந்தேகம்,” என்­றார் அவர்.

உள்­ளூர் ஹோட்­டல்­களில் தங்­கு­வ­தற்­கான தொகுப்­புத் திட்­டங்­கள் விலைக் கட்­டுப்­ப­டி­யாக இல்லை என்று திரு செலப் டான், 48, கூறி­னார். தமது இரு பிள்­ளை­களும் விடு­முறை நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட தாம் முன்­ப­திவு செய்­ய­வி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

நான்கு அல்­லது ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லில் பற்­றுச்­சீட்­டு­களைப் பயன்­ப­டுத்த திரு நாராய­ண­சாமி, 68, விரும்­பி­னார். ஆனால், ஓர் இர­வுக்கு ஹோட்­டல் அறைக்­கான கட்­ட­ணம் குறைந்­த­பட்­சம் $200 விதிக்­கப்­ப­டு­வ­தால் தாம் முன்­ப­திவு செய்­யப் போவ­தில்லை என்று அவர் சொன்­னார்.

$320 மில்­லி­யன் மதிப்­பி­லான சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான சுற்றுலா பற்­றுச்­சீட்டுத் திட்­டம், தேசிய அள­வில் அர­சாங்­கத்­தால் வழங்­கப்­படும் முதல் மின்­னி­லக்­கப் பற்­றுச்­சீட்­டுத் திட்­ட­மா­கும்.

இணைய முன்­ப­தி­வுத் தளங்­களில் முன்­ப­திவு செய்­வ­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வோர் தீவெங்­கும் சமூக மன்­றங்­கள் உள்­ளிட்ட இடங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள 69 முகப்­பு­க­ளுக்­குச் சென்று உதவி பெற­லாம். தெம்­ப­னிஸ் ஈஸ்ட் சமூக மன்­றத்­தில் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் அத்­த­கைய முகப்­பு­களில் முன்­ப­திவு செய்ய நேற்று காலை அங்கு வந்­த­வர்­களில் டாக்சி ஓட்­டு­நர் இங் பெங் லாமும் அவ­ரது மனைவி ஓங் சூன் ஹுவா­வும் அடங்­கு­வர்.

மரினா பே சேண்ட்­சில் உள்ள ‘சேண்ட்ஸ் ஸ்கை­பார்க், அப்­சர்­வே­ஷன் டெக்’ மற்­றும் ‘சிங்­கப்­பூர் ஃபிளையர்’ ராட்­டி­னத்­திற்­குச் செல்ல இந்­தத் தம்­பதி நுழை­வுச் சீட்­டு­க­ளுக்கு முன்­ப­திவு செய்­த­னர்.

பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொண்டு முன்­ப­திவு செய்ய தெம்­ப­னிஸ் ஈஸ்ட் சமூக மன்­றத்­திற்கு நேற்று காலை 11 மணிக்­கும் நண்­ப­கல் 12 மணிக்­கும் இடை­யில் ஐந்து முதல் 10 பேர் வரை வந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!