சுடச் சுடச் செய்திகள்

மாணவரை உள்ளாடை மட்டும் அணிந்து படம் எடுத்து அனுப்பச் சொன்னவருக்கு 2 மாத சிறை

மாண­வர் ஒரு­வரை உள்­ளாடை அணிந்து படம் எடுத்து அதை அனுப்ப சொல்­லிய பயி­ல­ரங்­குப் பயிற்­று­விப்­பா­ளர் டே யீ ஹுவிக்கு (படம்) நேற்று இரண்டு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி டே நடத்­திய தலை­மைத்­து­வப் பயி­ல­ரங்­குக்­குப் பிறகு அந்த 15 வயது மாண­வ­ரின் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தைத் தாம் தொடர விரும்­புவதாக டே கூறினார். டேயின் கோரிக்கையை அந்த மாண­வர் ஏற்­றார். இரு­வருக்­கும் இடை­யி­லான உரை­யா­டலை ரக­சி­ய­மாக வைத்துக்­கொ­ளும்­படி டே கேட்­டுக்­கொண்­டார்.

அந்த மாண­வரை உள்­ளா­டை­யில் தோன்­றும் படம் ஒன்றை அனுப்­பும்­படி டே கேட்­டுக்­கொண்­டார். அந்த மாண­வர் டேயின் இந்­தக் கோரிக்­கைக்கு இணங்­க­வில்லை. இருப்­பி­னும், அந்த மாண­வ­ரு­டன் பாலி­யல் தொடர்­பி­லான தலைப்­பில் டே தொடர்ந்து உரை­யா­டி­னர்.

டேயின் தகாத வேண்­டு­கோ­ளால் சங்­க­டம் அடைந்த அந்த மாண­வர் நடந்­த­வற்­றைத் தமது ஆசி­ரி­ய­ரி­டம் கூறி­னார். அந்த ஆசி­ரி­யர் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தார். மாண­வ­ரி­டம் தகாத முறை­யில் நடந்­து­கொள்ள முயற்சி செய்த குற்­றத்­திற்கு டேக்கு ஐந்து ஆண்­டு­கள் வரை­ சிறைத் தண்­ட­னையோ $10,000 வரை­ அப­ரா­தமோ அல்லது இரண்­டுமோ விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon