சுடச் சுடச் செய்திகள்

பொய்யான சமய போதனைகள் செய்தவர் தொடர்பில் தன் மீதான குறைகூறல்களை மறுத்தது முயிஸ் மன்றம்

பொய்­யான சமய போத­னை­களை கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக செய்த ஒரு­வர் மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்க முயிஸ் எனப்­படும் சிங்­கப்­பூர் இஸ்­லா­மிய சமய மன்­றம் தவறி விட்­டது என்று எழுந்­துள்ள குறை­கூ­றல்­க­ளுக்கு அந்த மன்­றம் பதி­ல­ளித்­துள்­ளது.

அந்த ஆட­வ­ரின் பொய்­யான சமய போத­னை­கள் தொடர்­பி­லான செயல்கள் கடந்த மாதம் வெளிச்­சத்­துக்கு வந்­தன.

முயிஸ் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில், மேற்­கூ­றப்­பட்ட விவ­கா­ரத்­தில், முன்­னாள் உடற்­பி­டிப்பு ஊழி­ய­ரா­கப் பணி­யாற்­றிய 50 வய­து­களில் உள்ள ஆட­வ­ரின் செயல்­கள் குறித்து தான் புல­னாய்வு செய்­த­தா­க­வும், அதன் தொடர்­பில் தகுந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் இந்த விவ­கா­ரம் தொடர்­பில் இதர அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து கூடு­தல் புல­னாய்வு மேற்­கொள்ள முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் கூறி­யது.

இந்த ஆட­வ­ரின் செயல் குறித்து நவம்­பர் 9ஆம் தேதி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழில் வெளி­வந்த செய்­திக்­குப் பிறகு முயிஸ் அச்­செ­யல் குறித்து மறு­வி­சா­ரணை மேற்­கொள்ள முடி­வெ­டுத்­தது.

நவம்­பர் 10ஆம் தேதி முயிஸ் வெளி­யிட்ட தனது அறிக்­கை­யில், 2018ஆம் ஆண்­டி­லேயே இந்த ஆட­வ­ரின் செயல் குறித்து தனக்­குத் தெரிய வந்­த­தும் அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது என்­றும் தெரி­வித்­தது.

ஆனால், இவ்­வி­வ­கா­ரத்­தில் முயிஸ் போதிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்று இணை­ய­வா­சி­கள் சிலர் கருத்­து­ரைத்­த­னர்.

அந்த ஆட­வ­ரின் சம­யக் குழு­வில் உள்ள பெண்­கள் கடந்த 15 ஆண்­டு­க­ளாக ஒரு சிறிய உண­வ­கத்­தை­யும் நிகழ்ச்சி ஏற்­பாட்டு நிறு­வ­னத்­தை­யும் நடத்தி வரு­கி­றார்­கள் என்­றும் செய்தி வெளி­யா­னது.

இந்த ஆட­வர் பற்­றிய கூடு­தல் விவ­ரங்­கள் தெரிந்தவர்­கள் தங்­கள் விசா­ர­ணைக்கு உதவ முன்­வரு­மாறு முயிஸ் நேற்று மீண்­டும் தனது அறிக்­கை­யில் கேட்­டுக்­கொண்­டது. ஆட­வர் பற்­றிய மின்­னஞ்­சல்­கள், குரல் பதி­வு­கள், இதர ஆவ­ணங்­கள் போன்ற ஆதா­ரங்­களை இம்­மா­தம் 11ஆம் தேதிக்­குள் தன்­னி­டம் சமர்ப்­பிக்­கும்­படி அது கேட்­டுக்கொண்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon