சிங்கப்பூர் எழுத்தாளர் அ. இன்பாவிற்கு கரிகாற்சோழன் விருது

 

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையும் இணைந்து வழங்கும் ‘கரிகாற்சோழன் விருது 2018’க்கு சிங்கப்பூர்,  மலேசிய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து ஒன்பது நூல்களும் மலேசியாவில் இருந்து 17 நூல்களும் இலங்கையில் இருந்து 14 நூல்களும் விருதுக்குப் போட்டியிட்டன.

அதில் சிங்கப்பூர் எழுத்தாளர் அ.இன்பாவின் ‘மூங்கில் மனசு’, மலேசிய எழுத்தாளர் ஏ.எஸ்.பிரான்சிஸ் எழுதிய ‘வானம் என்னும் போதிமரம்’, இலங்கையைச் சேர்ந்த தி.ஞானசேகரன் எழுதிய ‘எரிமலை’ ஆகிய நூல்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

சிங்கப்பூர் முஸ்தபா முஸ்தபா தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்கக்ல்வித் துறையுடன் இணைந்து தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ரூ.20 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதிலிருந்து ஆண்டுதோறும் சிங்கப்பூர், மலேசிய, இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon