அதிகம் செலவிட விரும்பும் மக்கள்

அதிகம் செலவிட விரும்பும் மக்கள்

2 mins read
db64578e-f36d-414f-a623-32ab45b737c6
சைனாடவுன் ஃபுட் ஸ்திரீட்டில் உணவருந்தும் வாடிக்கையாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்­வா­சி­கள் உள்­ளூர் ஹோட்­டல்­களில் தங்க கூடு­த­லாக செல­வி­ட­வும் அங்கு அடிக்­கடி தங்க விரும்­பு­வ­தா­க­வும் அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் (எஸ்­எம்யூ) உன்­னத சேவைக் கழ­கம் நடத்­திய இந்த ஆய்­வில் 450 பேர் பங்­கேற்­ற­னர். அவர்­களில் 63 விழுக்­காட்­டி­னர், உள்­ளூர் ஹோட்­டல்­களில் அடிக்­கடி தங்க விரும்­பு­வ­தா­கக் கூறி­னர். ஹோட்­டல்­களில் தங்க கூடு­தல் பணம் செல­வி­டத் தாங்­கள் தயா­ராக இருப்­ப­தாக 71 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­த­னர்.

உணவு, பானத் துறை மற்­றும் சுற்­றுப்­ப­ய­ணத் துறை­க­ளுக்­கான மூன்­றாம் காலாண்டு பய­னீட்­டா­ளர் மன­நி­றைவு குறி­யீட்­டின் முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன.

இதன் தொடர்­பில் நடத்­தப்­பட்ட ஆய்­வில், இவ்­வாண்டு ஜூலைக்­கும் செப்­டம்­ப­ருக்­கும் இடையே 2,500 உள்­ளூர்­வா­சி­கள் பங்­கேற்­ற­னர்.

கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லில், உண­வ­கங்­களில் உணவு வாங்­கும் ஐவ­ரில் மூவர், உண­வைப் பொட்­ட­லம் கட்டி செல்­லும் சேவையை அல்­லது உணவை வீட்­டிற்கு விநி­யோ­கிக்­கும் சேவை­யைப் பெறு­வ­தாக ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. உணவை வீட்­டிற்கு விநி­யோ­கிக்­கும் சேவை­யைப் பெற விரும்­பு­வோர், மீண்­டும் அந்­தந்த உண­வ­கங்­களில் உணவு வாங்­கு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதோடு, அங்கு உணவு விலை உயர்த்­தப்­பட்­டா­லும் அதை ஏற்­கத் தாங்­கள் தயா­ராக இருப்­ப­தா­க­வும் ஆய்வு கண்­ட­றிந்­தது.

விசு­வா­சமாக இருப்பது என்ற அம்சத்தைப் பொறுத்­த­வரை, வீட்டிற்கு உணவு விநி­யோ­க சேவையைத் தேர்ந்தெடுப்போர், 73.8 புள்­ளி­க­ளைப் பெற்­ற­னர். உண­வைப் பொட்­ட­ல­மிட்டு கொண்டு செல்­வோர் 73.1 புள்­ளி­க­ளைப் பெற்­ற­னர்.

மாறாக, உண­வ­கத்­தில் அமர்ந்து உண­வ­ருந்­தும் வாடிக்­கை­யா­ளர்­கள் 68.9 புள்­ளி­களை மட்­டும் பதிவு செய்­த­னர்.

உணவு, பானத் துறை மற்­றும் சுற்­றுப்­ப­ய­ணத் துறை­களில் இணை­யம் வழி தக­வல்­கள் பெறப்­பட்­டு இ­ருப்­பது இதுவே முதன்­முறை.