உணவு நஞ்சானதில் துணை போலிஸ் அதிகாரி உயிரிழந்த விவகாரம்: $32,000 அபராதம்

உணவு நஞ்சாக மாறியதொரு நிகழ்வு 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படவும் துணை போலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது.

அந்நிகழ்வு தொடர்பில் ‘ஸ்பைஸ்’ உணவு விநியோக நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனமான ‘ஸ்பைஸ் இவென்ட்ஸ்’ உணவகத்திற்கும் நேற்று $32,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த 2018 நவம்பர் மாதம் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில், உண்ணத் தகாத உணவை வைத்திருந்தது உட்பட அவ்விரண்டு நிறுவனங்கள் மீதான 14 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன என்று தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தன.

அங்கீகாரம் பெறாத உணவு கையாள்வோரை வேலையில் அமர்த்தியது, உரிமம் பெறாத இடங்களில் உணவு சமைத்தது, சமையலறை மேற்பரப்புகளையும் சமையல் பாத்திரங்களையும் சுத்தமாக வைக்கத் தவறியது போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.

அவ்விரு உணவு நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளும் சமையலறையின் மேற்பரப்புகளிலும் சில உணவுப்பொருள்களிலும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தவல்ல ‘சால்மனெலா’ நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறின.

தீபாவளியைக் கொண்டாடுவதற்காக பிரிங்க்ஸ் சிங்கப்பூர் நிறுவனம் 2018 நவம்பர் 6ஆம் தேதி நிறுவன அளவிலான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்நிகழ்ச்சிக்கு ‘ஸ்பைஸ்’ உணவு விநியோகம் செய்தது.

மொத்தம் 96 பேர் அந்த உணவை உண்டனர். அவர்களில் 63 பேருக்கு இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் தோன்றியதாகவும் அதைத் தொடர்ந்து 45 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அவர்களில் ஒருவரான முகம்மது ஃபத்லி முகம்மது சாலே, 38, என்ற ஆடவர் எட்டு நாள்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.

அதையடுத்து, 2018 டிசம்பர் 6ஆம் தேதி அவ்விரு ‘ஸ்பைஸ்’ நிறுவனங்களின் செயல்பாட்டு உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!