ஆய்வு: பாதிப்பேர் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு

ஆய்வு: பாதிப்பேர் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவு

2 mins read
982f4e7a-c42e-463e-9661-14198d86aba9
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இங்கேயே பொருட்களை வாங்கி நிறுவனங்களுக்கு பயனீட்டாளர்கள் உதவுகிறார்கள்

சிங்­கப்­பூர் பயனீட்டாளர்களில் ஏறக்­கு­றைய பாதிப்பேர் உள்­ளூர் நிறு­வ­னங்­களில் பொருட்­களை வாங்க விரும்­பு­கி­றார்­கள். கொவிட்-19 கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்ள நிறு­வ­னங்­கள் மீண்டு வரு­வ­தற்கு உத­வும் வகை­யில் அவர்­கள் இதைச் செய்­கிறார்­கள்.

'ஆசி­யான் பய­னீட்­டா­ளர் மன­வோட்­டம்' என்ற ஆய்­வ­றிக்கை இவ்­வாறு தெரி­விக்­கிறது. அந்த ஆய்வை யுஓபி வங்கி நடத்­தி­யது.

சிங்­கப்­பூ­ரில் 1,000 பேரை உள்­ள­டக்கி அந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது. கடு­மை­யான நெருக்­க­டிக்கு உள்­ளாகி இருக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு ஒரு நல்ல செய்­தி­யாக ஆய்வு முடிவு­கள் இருக்­கின்­றன. உள்­ளூர் நிறு­வ­னங்­களை உள்­ள­டக்கி சிங்­கப்­பூர், சீன வர்த்­தக தொழில் சபை ஆய்வு ஒன்றை நடத்­தி­யது.

தங்­க­ளுக்கு வரு­மா­னம் குறைந்து­விட்­ட­தாக 50க்கும் அதிக நிறு­வ­னங்­கள் அதில் தெரி­வித்து இருந்­தன. இதை டிபி­எஸ் வங்கி தனது ஆய்­வ­றிக்­கை­யில் சுட்­டி­யது.

உள்­ளூர் நிறு­வ­னங்­கள் கடந்த எட்டு மாத கால­மாக படா­த­பா­டு­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. இந்த நிலை­யில் அவற்­றுக்குக் கிடைக்­கும் ஒவ்­வொரு வெள்­ளி­யும் பெரும் பலன் தரு­வ­தாக இருக்­கும் என்று யுஓபி வங்­கி­யின், வங்­கித் தொழில் குழு­மத்­தின் தலை­வர் லாரன்ஸ் லோ தெரி­வித்­தார்.

உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் போக்கு சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மின்றி தென்­கி­ழக்கு ஆசிய நாடு­கள் பல­வற்­றி­லும் காணப்­ப­டு­கிறது.

இந்த வட்­டார நாடு­க­ளின் பய­னீட்­ட­ாளர்­கள் தங்­கள் உள்­ளூர் நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ரவு அளிப்­பதில் ஒற்­று­மை­யைப் புலப்­ப­டுத்­து­கி­றார்­கள். இதில் இந்­தோ­னீ­சியா, 72 விழுக்­காட்டு அள­வு­டன் முத­லி­டத்­தில் இருக்­கிறது.

மலே­சியா, தாய்­லாந்து ஆகிய நாடு­கள் அடுத்­த­டுத்த நிலை­யில் உள்­ளன.

இதனிடையே, வாடிக்­கை­யாளர்கள் இணை­யத்­தில் செல­விடு­வ­தும் அதி­க­ரிக்­கிறது என்­பது இந்த வங்­கி­யின் பண அட்டை பரி­வர்த்­த­னை­கள் மூலம் தெரி­ய­வரு­கிறது.

உள்­ளூர் நிறு­வ­னங்­கள் இணைய வர்த்­தக ஆற்­றல்­க­ளைப் பெருக்­கிக் கொள்ள இந்த வங்கி உதவியுள்ளது.

இவை ஒரு­பு­றம் இருக்க, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்த தொழில் நடை­மு­றை­க­ளைக் கொண்ட நிறு­வனங்­களில் பணத்­தைச் செல­விட வேண்­டும் என்ற எண்­ணம் ஏறக்­கு­றைய 43 விழுக்­காட்டு சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர்­க­ளி­டையே நில­வு­கிறது என்­ப­தை­யும் யுஓபி வங்கி நடத்­திய ஆய்வு கண்­ட­றிந்து இருக்­கிறது.