8,000 ஊழியர்களின் திறனை மேம்படுத்த இலக்கு

ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் நிறுவனம் உல­க­ளா­வி­ய பயிற்சி மையத்தை சிங்­கப்­பூ­ரில் அமைத்­துள்­ளது. இந்த மையத்­துக்கு ‘டிஸ்­க­வர் லேப்’ எனப் பெயர் வைக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பயிற்சி மையத்­தின் மூலம் 2022ஆம் ஆண்­டுக்­குள் சிங்­கப்­பூ­ரில் உள்ள தனது ஊழி­யர்­களில் 8,000 பேருக்­குப் பயிற்சி அளித்து அவர்­க­ளது திறன்­களை மேம்­ப­டுத்த அது இலக்கு கொண்­டுள்­ளது.

தனது மின்­னி­லக்க, வர்த்­த­க வளர்ச்­சித் திட்­டங்­களை ஆத­ரிக்­கும் நோக்­கில் சிங்­கப்­பூ­ரில் உள்ள அதன் ஊழி­ய­ர­ணி­யின் திறன்­களை மேம்­ப­டுத்தி வலு­வ­டை­யச் செய்ய ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் $5 மில்­லி­யனை முத­லீடு செய்­துள்­ளது.

புதிய ‘டிஸ்­க­வர் லேப்’ பயிற்சி மையம், ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட்@ சாங்கி 1ல் அமைந்­துள்­ளது.

ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்க மெய்­நி­கர் மற்­றும் நேருக்கு நேர் சந்திப்பு அணு­கு­முறை கடைப்­பி­டிக்­கப்­படும்.

ஊழி­யர்­கள் தங்­க­ளுக்கு ஏற்­கெ­னவே இருக்­கும் திறன்­களை மேம்­ப­டுத்­த­லாம். அல்­லது தங்­க­ளுக்கு விருப்­ப­முள்ள புதிய திற­னைக் கற்­றுக்­கொள்­ள­லாம். இந்­தத் திறன் அவர்­க­ளது வேலை­யு­டன் தொடர்­பில்­லாத ஒன்­றா­கக்­கூட இருக்­க­லாம் என்று ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்கி தெரி­வித்­தது.

செயற்கை நுண்­ண­றிவு, தர­வு­கள், சுய மேம்­பாடு போன்ற திறன்­களை ஊழி­யர்­கள் கற்­றுக்­கொள்­ள­லாம்.

தனது ஒன்­பது எதிர்­கா­லத் திறன் பயிற்­சிக் கழ­கங்­களை ஒரே கூரை­யின்­கீழ் ‘டிஸ்­க­வர் லேப்’ கொண்டு வரு­வ­தாக ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்கி கூறி­யது.

மின்­னி­லக்க வங்கி முறை, அனைத்­து­லக வங்கி முறை, இணை­யத் தக­வல் பாது­காப்பு,

தர­வுத் தீர்­வு­கள், பகுப்­பாய்வு முறை, செயற்கை நுண்­ண­றிவு

உரு­வாக்­கத் திறன் போன்ற எதிர்­கால வளர்ச்­சித் திறன்­களில்

இந்­தப் பயிற்­சிக் கழ­கங்­கள் கவ­னம் செலுத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

எதிர்­கா­லத்­துக்கு தேவை­யான திறன்­கள் கொண்ட ஊழி­யர்­களை உறுதி செய்ய உயர் கல்வி நிலை­யங்­கள், அர­சாங்க ஊழி­ய­ரணி அமைப்­பு­கள், தொழிற்­து­றைப் பங்­கா­ளி­கள் ஆகி­யோ­ரு­டன் இணைந்து செயல்­பட இருப்­ப­தாக ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் வங்கி கூறி­யது.

சிங்­கப்­பூ­ரில் அதன் அனைத்­து­ல­கப் பட்­ட­தா­ரித் திட்­டத்­தைத் துரி­தப்­ப­டுத்த திட்­டம் கொண்­டுள்­ள­தா­க­வும் அது தெரி­வித்­தது.

முன்­னிலை பொறி­யி­யல் கல்­லூ­ரி­கள், பயிற்சி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து உள்­ளூர் திற­னா­ளர்­களை வேலை­யில் அமர்த்தி சிங்­கப்­பூ­ரில் உள்ள தனது தொழில்­நுட்ப, புத்­தாக்­கக் குழு­வில் சேர்க்க ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஆள்­சேர்ப்பு முயற்­சி­க­ளைப் பூர்த்தி செய்ய மைக்­ரோ­சா­ஃப்ட், ஐபி­எம் ஆகிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து அது செயல்­பட இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!