முன்னோட்டத் திட்டமாக கிளமெண்டியில் 'போஸ்ட்பால்' விவேக தபால்பெட்டிகள்

2 mins read
e2ae782b-2952-4bd8-ac5a-041e4110bb4a
புதிய 'போஸ்ட்பால்' விவேக தபால்பெட்டியைப் பயன்படுத்தும் முறை குறித்து செய்தியாளர் களிடம் பகிர்ந்து கொண்டார் சிங்போஸ்ட்டின் புத்தாக்கப் பிரிவின் துணைத் தலைவர் திரு எட்மண்ட் டான். புதிய விவேக தபால்பெட்டி களுக்கான முன்னோட்டத் திட்டம் ஓராண்டுக்கு நடத்தப்படும்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கிள­மெண்டி வட்­டா­ரத்­தில் உள்ள இரண்டு குடி­யி­ருப்­புக் கட்­ட­டங்­களில் முன்­னோட்­டத் திட்­ட­மாக இரண்டு விவேக தபால்­பெட்­டி­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன.

புதிய விவே­க தபால்­பெட்­டி­யில் தபால்­கள் போடப்­பட்­ட­தும் அந்­தந்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அவர்­க­ளது கைபே­சி­களில் தக­வல் அனுப்­பி­வைக்­கப்­படும்.

இத­னால் தங்­கள் தபால்­பெட்­டி­களில் தபால்­ இருக்­கிறதா எனத் தெரிந்­து­கொள்­வ­தற்கு அவர்­கள் அதைத் திறந்து பார்க்­கத் தேவை­யில்லை.

இவ்­வ­ளவு கால­மாக பயன்­ப­டுத்­தப்­படும் தபால்­பெட்­டி­க­ளுக்­குப் பதி­லாக இந்த விவே­கத் தபால்­பெட்­டி­க­ளைப் பயன்­ப­டுத்த சிங்­போஸ்ட் இலக்கு கொண்­டுள்­ளது.

'போஸ்ட்­பால்' என்று அழைக்­கப்­படும் இந்த விவே­க தபால்­பெட்டி, கட்­ட­டத்­தில் வசிக்­கும் அனைத்து வீடு­க­ளின் தபால்­களை வைத்­தி­ருக்­கும்.

அவ­ர­வர் தபால்­பெட்­டி­க­ளைத் திறக்க சாவி­யைப் பயன்­ப­டுத்தி திறப்­ப­தற்­குப் பதி­லாக சிங்­போஸ்ட் செயலி வழங்­கும் கியூ­ஆர் குறி­யீட்டை ஸ்கேன் செய்து விவே­க தபால்­பெட்­டி­யி­லி­ருந்து தங்­கள் தபால்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

தங்­கள் சார்­பாக மற்­ற­வர்­கள் தபால்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­வும் செயலி மூலம் குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஏற்­பாடு செய்­ய­லாம்.

தபால் விநி­யோ­கத்­தில் மேம்படுத்­தப்­பட்ட அம்­சங்­க­ளைக் கொண்­டி­ருக்­கும் போஸ்ட்­பால் விவே­க தபால்­பெட்டி முறை­யால் கடி­தங்­கள் தவ­றாக விநி­யோ­கம் செய்­யப்­படும் சாத்­தி­யம் குறை­யும்.

அது­மட்­டு­மல்­லாது, தபால்­கா­ர­ரின் வேலைப் பளு­வும் குறை­யும் என்று சிங்­போஸ்ட் தெரி­வித்­தது.

விவே­க தபால்­பெட்­டி­க­ளுக்­கான முன்­னோட்­டத் திட்­டம் ஓராண்­டுக்கு நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தந்த வீடு­க­ளுக்­கான தபால்­களை போஸ்ட்­பால் விவே­க தபால்­பெட்டி தானா­கவே அடுக்­கி­வைத்து விடும். தபால்­கா­ரர்­கள் அதைச் செய்ய வேண்­டி­ய­தில்லை. அந்­தக் கட்­ட­டத்­தில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­கான கடி­தங்­கள் அனைத்­தை­யும் அவர்­கள் அப்­ப­டியே போஸ்ட்­பால் விவே­க தபால்­பெட்­டிக்­குள் போட்­டு­விட்­டால் போதும். கிள­மெண்டி அவென்யூ 6 புளோக் 202ல் குடி­யி­ருப்­பா­ளர்­கள் புதிய விவே­க தபால்­பெட்­டியை இம்­மா­தம் 18ஆம் தேதி­யி­லி­ருந்து பயன்­ப­டுத்த தொடங்­கு­வர். ழ

புளோக் 205ல் வசிப்­ப­வர்­கள் அடுத்த சில வாரங்­களில் விவே­க தபால்­பெட்­டி­யைப் பயன்­ப­டுத்த தொடங்­கு­வர்.