லீ குவான் இயூவின் வழக்கறிஞர் சாட்சியம் அளித்தார்

பிர­த­மர் லீ சியன் லூங்­கின் நற்பெயருக்குக் களங்கம் விளை­வித்­த­தாக தி ஆன்­லைன் சிட்­டி­சன் இணை­யப்­பக்­கத்­தில் ஆசி­ரி­ய­ராக டெரி ஸூவுக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

இந்த வழக்­கில் மறைந்த திரு லீ குவான் இயூ­வின் வழக்­க­றி­ஞ­ரான திரு­வாட்டி குவா லிம் லி நேற்று சாட்­சி­யம் அளித்­தார்.

அவ­ரி­டம் டெரி சூவின் வழக்­க­றி­ஞர் திரு லிம் தியேன் குறுக்­கு­வி­சா­ரணை நடத்­தி­னார்.

திரு லீ குவான் இயூ­வுக்­காக மொத்­தம் ஆறு உயில்­களை திரு­வாட்டி குவா தயா­ரித்­த­வர்.

முதல் நான்கு உயில்­களில் தமது ஆக்ஸ்லி சாலை வீட்டை இடிக்க வேண்­டும் என்ற குறிப்பு முதல் நான்கு உயில்­களில் இடம்­பெற்­றி ருந்ததை திரு­வாட்டி குவா உறுதி செய்­தார்.

ஐந்­தா­வது மற்­றும் ஆறா­வது உயில்­களில் அந்­தக் குறிப்பு இடம்­பெ­ற­வில்லை என்­றார் அவர்.

ஆனால் திரு­வாட்டி குவா தயா­ரிக்­காத ஏழா­வது மற்­றும் கடைசி உயி­லில் அந்­தக் குறிப்பு சேர்க்­கப்­பட்­டது.

சொத்­தில் தமது மக­ளுக்­குக் கூடு­தல் பங்கு கொடுக்க திரு லீ குவான் இயூ தம்­மி­டம் கூறி­யி­ருந்­த­தாக திரு­வாட்டி குவா தெரி­வித்­தார்.

ஆனால் கடைசி உயி­லில் மூன்று பிள்­ளை­க­ளுக்­கும் சரி­ச­ம­மான பங்கு கொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு லீ குவான் இயூ­வின் ஆக்ஸ்லி சாலை வீடு அர­சி­த­ழில் இடம்­பெற்­றி­ருப்­ப­தைக் காட்­டும் ஆவ­ணங்­க­ளைக் குறைந்­தது இரண்டு முறை தேடி­ய­தா­க­வும் அதைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை என்று அவ­ரி­டம் தெரி­வித்­த­தா­க­வும் திரு­வாட்டி குவா நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

ஆக்ஸ்லீ சாலை வீடு அரசிதழில் இடம்பெற்றிருப்பதால் அதை இடிக்க முடியாது என்று தமது தந்தையைத் தமது சகோதரரான பிரதமர் லீ சியன் லூங் நம்ப வைத்ததாக திரு லீ குவான் இயூவின் மகள் டாக்டர் லீ வெய் லிங் குற்றம் சுமத்தியதாக திரு ஸூ தமது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!