வேலையிடங்களில் பாலியல் தொடர்பான தேவையற்ற குறுந்தகவல்கள், அழைப்புகள் நான்கு மடங்கு அதிகரிப்பு

வேலையிடங்களில் பாலியல் தொடர்பான தேவையற்ற குறுந்தகவல்கள், அழைப்புகள் நான்கு மடங்கு அதிகரிப்பு

2 mins read
c712bb1f-f033-420e-b331-0a187b74b179
படம்: தி நியூ பேப்பர் -

2016ஆம் ஆண்­டி­லி­ருந்து 2019ஆம் ஆண்டு வரை வேலை­யி­டங்­களில் பாலி­யல் தொடர்­பான தேவை­யற்ற குறுந்­த­க­வல், அழைப்­பு­கள் ஆகி­ய­வற்­றின் எண்­ணிக்கை நான்கு மடங்கு அதி­க­ரித்­த­தாக 'அவேர்' எனும் மக­ளிர் செயல், ஆய்­வுச் சங்கம் தி நியூ பேப்­ப­ரி­டம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

அதே கால­கட்­டத்­தில் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளின் வேலை­யி­டத்­தில் அவர்­க­ளுக்கு இத்­த­கைய தொல்­லை­க­ளைக் கொடுப்­போ­ரின் எண்­ணிக்கை மும்­ம­டங்­குக்­கும் அதி­க­மாக அதி­க­ரித்­த­தாக தெரி­விக்­கப்­படுகிறது.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக தொழில்­நுட்­ப உத­வி­யு­டன் நடத்­தப்­படும் பாலி­யல் வன்­முறை சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அத்­து­டன் ஒத்­துப்­போ­கும் வகை­யில் வேலை­யி­டங்­களில் பாலி­யல் தொடர்­பான குறுந்­த­க­வல்­கள், அழைப்­பு­கள் அனுப்­பப்­படும் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது என்­றும் சங்கம் கூறி­யது.

பாலி­யல் ரீதி­யாக தாக்­கப்­பட்­டோ­ருக்­க­கான அதன் பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் 2016ஆம் ஆண்­டில் 47 பேருக்கு உத­வி­ய­தாக சங்கம் தெரி­வித்­தது.

இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு 140ஆக அதி­க­ரித்­த­தாக அது கூறி­யது.

சமூக ஊட­கம், தக­வல் அனுப்­பும் தளங்­கள் போன்ற மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி பெண்­க­ளுக்­குத் தெரி­யா­மல் அவர்­க­ளைப் பாலி­யல் நோக்­கத்­து­டன் படம் அல்­லது காணொளி எடுப்­பது, பாலி­யல் நோக்­கத்­து­டன் அவர்­க­ளுக்­குத் தக­வல்­கள் அல்­லது அழைப்­பு­களை அனுப்­பு­வது போன்­றவை அதி­கம் நிகழ்ந்­துள்­ள­தாக கழ­கம் கூறி­யது.

கடந்த ஆண்­டில் மட்­டும் 41 தேவை­யற்ற, ஆபா­ச­மிக்க பாலி­யல் தக­வல்­கள் தொடர்­பான புகார்­கள் பதி­வா­கின. மூன்­றில் ஒரு பங்கு சம்­ப­வங்­க­ளுக்­குப் பாதிக்­கப்­பட்­டோ­ரின் சக ஊழி­யர்­கள், மேற்­பார்­வை­யா­ளர்­கள், வாடிக்­கை­யா­ளர்­கள் போன்­ற­வர்­கள் கார­ணம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. பாலி­யல் ரீதி­யான தாக்­கு­தல்­க­ளால் பாதிக்­கப்­படும் பலர் அவை குறித்து புகார் நெய்­வ­தில்லை என்று சங்கத்­தின் சட்ட, ஆய்­வுப் பிரி­வின் தலை­வர் திரு­வாட்டி ஷைலி ஜின்­கொ­ராணி தெரி­வித்­தார்.

குறிப்புச் சொற்கள்