சுடச் சுடச் செய்திகள்

நாட்டிய நாடகம் வழி ஆத்திச்சூடியின் விழுமியங்களைக் கற்பித்தல்

ஆத்திச்சூடியை ஒளவையார் ஒரே வரியில் உயிர் எழுத்துக்களைக் கொண்டு எழுதியுள்ளார். இந்தப் புகழ்பெற்ற நீதி நூல் சிறந்த பண்புகள் நிறைந்ததாகவும். குழந்தைகளுக்கு கற்பிக்ககூடிய அளவில் எளிமையாகவும் உள்ளது. 

ஆத்திச்சூடியின் விழுமியங்களை நாட்டிய நாடக முறையில் சிறார்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக ‘ஒளவையாரின் ஆத்திச்சூடி’ என்ற நிகழ்ச்சி படைக்கப்படவுள்ளது. 

குடும்பம், நண்பர்களுடன் கொண்ட உறவுகளை மையமாக்கி உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு இந்திய பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தைப் பயன்படுத்தும். 

நாளை (டிசம்பர் 5) மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியை ரிதம்ஸ் எஸ்தெடிக் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு நுழைவுச்சீட்டும் $8க்கு விற்பனையாகிறது. 

தமிழ் மொழி விழாவின் ஒர் அங்கமாக இந்த நிகழ்ச்சி மேடையேற்றப்படுகிறது.  

மெய்நிகர் காணொளி வடிவில் வழங்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பெற சிஸ்டிக் நேரலைத் தளமான ‘சிஸ்டிக் லைவ்’ (SISTIC LIVE) இணையத்தளத்தை நாடலாம். 

இணைப்பு: www.sistic.com.sg/events/slavvai1220 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon