பானம் பருகி பாராட்டைத் தெரிவிக்கும் சவால்

பானம் பருகி பாராட்டைத் தெரிவிக்கும் சவால்

1 mins read
5f543d13-5a1c-4299-96a3-bd0dcef82c62
பிரதமர் லீ ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூரை கொள்­ளை­நோய் ஆட்டி­வைத்­தா­லும், அந்­நோயை ஒழிக்­கும் போராட்­டத்­தில் பங்­களிப்­ப­தில் ஊழி­யர்­கள் எவ­ரும் பின்­வாங்­க­வில்லை. இதைச் சிறப்­பிக்­கும் வகை­யில் நேற்று பிர­த­மர் லீ சியன் லூங் தம் ஃபேஸ்புக் வழி புதிய ஹேஷ்­டேக் சவால் ஒன்றை அறி­வித்­தார்.

நான்கு மொழி­க­ளி­லும் நன்றி உரைத்த பிர­த­மர் லீ, சவால்­மிக்க 2020ஆம் ஆண்­டைப் பற்றி குறிப்­பிட்டதுடன், ஊதி­யங்­களும் வாழ்­வா­தா­ரங்­களும் பாதிக்­கப்­பட்­ட­தைப் பற்­றி­யும் பேசி­னார். முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், அத்­தி­யா­வ­சிய சேவை­களில் உள்ள ஊழி­யர்­க­ளின் தியா­கங்­க­ளை­யும் அவர் குறிப்­பிட்­டார்.

'#toast2U' என்ற ஹேஷ்­டேக் இணைப்­பு­டன் அவர் அறி­வித்த சவால் வழி, 'என்­டி­யுசி இன்­கம்' அதன் 'என்­டி­யுசி யு கேர்' திட்­டத்­திற்கு நிதி ஒதுக்­கும் என்­றும் அது குறைந்த வரு­மான உறுப்­பி­னர்­களுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் வெவ்­வேறு உத­வித்­திட்­டங்­கள் மூலம் சென்­ற­டை­யும் என்­றும் கூறப்­பட்­டது.

இச்­ச­வா­லில் பங்­கேற்க நீங்­கள் செய்­ய­வேண்­டி­யது இது­தான். சவா­லுக்கு உங்­களை நிய­ம­னம் செய்­த­வ­ரி­ட­மி­ருந்து பானத்­தைப் பெறு­வ­தாக பாவனை செய்து, நீங்­களும் பாராட்டு தெரி­விக்­கும் காணொளி ஒன்­றைப் பதிவு செய்ய வேண்­டும். பானத்­தைக் குடித்­து­விட்டு அதை வேறு இரு­வ­ருக்­குத் தரு­வ­தா­கக் கூறி நிய­ம­னம் செய்ய வேண்­டும்.

பதி­வேற்­றம் செய்­யும்­போது '#toast2U', '#U Heart' இணைப்­பு­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­ளுங்­கள். ஒவ்­வொரு '#toast2U' ஹேஷ்­டேக்­குக்­கும் $2 நன்­கொடை வழங்­கப்­படும்.