கடந்துவந்த மனநல போராட்டங்கள் குறித்து டிபிஎஸ் நிறுவனத்தின் பியுஷ் குப்தா

கடந்துவந்த மனநல போராட்டங்கள் குறித்து டிபிஎஸ் நிறுவனத்தின் பியுஷ் குப்தா

3 mins read
0cf23a8a-9376-42f6-8e07-bb585774dc94
உல­கின் தலை­சி­றந்த வங்­கியை வழி­ந­டத்­தும் வங்­கி­யா­ள­ராக திரு பியுஷ் குப்­தாவை (படம்) அனை­வரும் அறிந்­தி­ருப்­போம். உள்­ளூர் வங்கி ஒன்றை, அனைத்­து­லக அள­வில் அங்­கீ­கா­ரம் பெறச் செய்து டிபி­எஸ் வங்­கி­யின் உரு­மாற்­றத்­திற்­குக் கார­ண­மான இவர், பொது நிகழ்­வு­களில் தன்­னம்­பிக்கை நிறைந்­த­வ­ரா­கக் காணப்­ப­டு­வார். படம்: பிசினஸ் டைம்ஸ் -

உல­கின் தலை­சி­றந்த வங்­கியை வழி­ந­டத்­தும் வங்­கி­யா­ள­ராக திரு பியுஷ் குப்­தாவை (படம்) அனை­வரும் அறிந்­தி­ருப்­போம். உள்­ளூர் வங்கி ஒன்றை, அனைத்­து­லக அள­வில் அங்­கீ­கா­ரம் பெறச் செய்து டிபி­எஸ் வங்­கி­யின் உரு­மாற்­றத்­திற்­குக் கார­ண­மான இவர், பொது நிகழ்­வு­களில் தன்­னம்­பிக்கை நிறைந்­த­வ­ரா­கக் காணப்­ப­டு­வார்.

ஆனால், அவ­ரது பய­ணம் அத்­தனை சுமு­க­மாக அமை­ய­வில்லை. அவர் தொடங்­கிய இணை­யத்­த­ள­மான Go4i.com, 2000ஆம் ஆண்­டில் தோல்­வி­யில் முடிந்­ததை அடுத்து கிட்­டத்­தட்ட ஓராண்டு கால­மாக மன­ந­லப் பிரச்­சி­னை­யுடன் தவித்­தார்.

கவ­லை­யைக் கடந்­து­வந்­தார்

"என் திட்­டம் கைகூ­ட­வில்லை. பெரிய முடி­வு­களை வாழ்க்­கை­யில் எடுத்­தாக வேண்­டிய சிக்­க­லுக்கு ஆளா­னேன்.

"ஒரு குறிப்­பிட்ட கால­கட்­டத்­தில் கவ­லை­யால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டேன். என் இணை­யத்­தள நிறு­வ­னத்தை முடக்­கி­னேன். என் வாழ்க்­கை­யோடு என்­ன­தான் செய்­வது என்­பது குறித்து யோசிக்க முயற்சி செய்­தேன்," என்­றார். அப்­போது அவ­ருக்­குக் கைகொ­டுத்­தது, தியா­னம்.

அன்று தொடங்­கிய தியா­னத்தை இன்­று­வரை திரு குப்தா கைவி­ட­வில்லை.

தூக்­க­மின்­மையை சமா­ளித்­தார்

தம் வேலை­யில் மன­ந­லம் தொடர்­பில் அவர் சந்­தித்த இரு சம்­ப­வங்­களில் இது­வும் ஒன்று. மற்­றொரு சம­யம் தூக்­க­மின்­மை­யால் அவர் பல­நாட்­க­ளாக கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டார்.

"இரு முறை­யும் எனக்கு மருத்­துவ உதவி தேவைப்­பட்­டது. பிரச்­சி­னை­யைத் தீர்க்க அது உத­வி­யது. மனித மூளை என்­பது கட்­டுப்­படுத்­தச் சிர­ம­மான ஒன்று என்­ப­தை­யும் சில நேரங்­களில் அது கட்­டுக்­கடங்­கா­மல் போக­லாம் என்­றும் இந்த இரண்டு சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து நான் கற்­றுக்­கொண்­டேன்.

மருத்­துவ உதவி தேவை

"இது மருத்­து­வம் தொடர்­பான ஒன்று என்­பதை அடை­யா­ளம் காண்­பதே சிறந்­தது. உடல்­ரீ­தி­யாக ஏற்­படும் மற்ற நோய்­க­ளைப் போலவே இதற்­கும் தகுந்த உத­வியை நாடு­வது அவ­சி­யம். களங்­கம் எனக் கருத வேண்­டாம்

"இத்­த­கைய பிரச்­சி­னையை ஒரு களங்­க­மா­கக் கருதி இதைப் பற்றி வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வ­தில் பலர் தயக்­கம் காட்­டு­வதை நான் அறிந்து­கொண்­டேன். ஆனால் எந்த அள­வுக்கு வெளிப்­ப­டை­யாக இருக்­கிறீர்­களோ, அந்த அள­வுக்கு இந்­தப் பிரச்­சி­னையை எளி­தில் சமா­ளிக்க முடி­யும்," என்­றார் அவர்.

தமது தலை­மைத்­துவ பாணியை, பிற­ரது உணர்­வு­க­ளுக்கு மதிப்­பளிக்­கும் வகை­யில் மாற்­றி­ய­மைக்க இவ்­விரு சம்­ப­வங்­களும் உத­வி­ய­தாக அவர் குறிப்­பிட்­டார். டிபி­எஸ் நிறு­வனத்­தில் 2009ஆம் ஆண்­டில் சேர்ந்த திரு குப்தா, 60, தலை­சிறந்த தலைமை நிர்­வாக அதி­காரி விருதை சென்ற ஆண்டு பெற்­றார்.

நிறு­வ­னத்­தில் மன­ந­லத்­துக்கு முக்­கி­யத்­து­வம்

இவர் தம் நிறு­வ­னத்­தில் மன­நலத்­துக்கு முன்­னு­ரிமை கொடுத்­துள்­ளார். மன­நல அழுத்­தம் ஏற்­படக்­கூ­டும் என்று முன்­கூட்­டியே அறிந்­தி­ருந்து பாது­காப்­பான சூழலை உரு­வாக்­கு­வ­தில் முத­லாளி­கள் அக்­கறை கொள்­ள­வேண்­டும் என்­பது அவ­ரது ஆலோ­சனை.

கொவிட்-19 உல­கில் மன­ந­லம் பேணு­வது மேலும் முக்­கி­ய­மா­கிறது.

உல­கத்­தையே உரு­கு­லைய வைத்­துள்ள கொவிட்-19 சூழ­லில், மன­நல விவ­கா­ரங்­கள் மேலும் முக்­கி­யத்­து­வம் பெற்­று­விட்­டதை நம்மால் உணர முடிகிறது.

தனிமை, பொரு­ளி­யல் கவலை ஆகி­ய­வற்­றால் மன­ந­லப் பிரச்­சினை­க­ளுக்கு ஆளா­வ­தா­கத் தனித்து வேலை செய்­யும் ஊழி­யர்­களில் 36 விழுக்­காட்­டி­னர் தெரி­வித்­துள்­ள­தாக 'மெர்­சர்' அறிக்கை ஒன்று கண்­ட­றிந்­தது.

ஊழி­யர் ஒரு­வர், தனக்கு மன­நலப் பிரச்­சினை இருப்­பது வெளியே தெரிய வந்­தால் அதை எதிர்­ம­றைப் பண்­பா­கப் பிறர் பார்ப்­பார்­கள் என்று அஞ்சி வெளிப்­ப­டை­யாக அதைப் பற்றி பேசா­ம­லும் இருக்­க­லாம்.

இருப்­பி­னும், நிறு­வ­னத்­தின் முத­லா­ளி­களே முன்­வந்து தங்­க­ளின் போராட்­டங்­க­ளைப் பற்றி வெளிப்­படை­யா­கப் பேசும்­போது, அனை­வ­ருக்­கும் இதன் தொடர்­பில் தெளிவு பிறக்­கிறது, களங்­கம் குறை­கிறது.

தங்­க­ளின் வாழ்க்­கை­யின் ஏதோ ஒரு கால­கட்­டத்­தில் ஏழில் ஒரு­வர், மன­ந­லம் தொடர்­பில் (உணர்வு, கவலை, மது­பா­னம் அருந்­து­தல்) பிரச்­சி­னையை சந்­தித்­தி­ருப்­பர் என்று ஆய்­வு­கள் கூறி­யுள்­ளன.

குறிப்­பாக இந்­தக் கொள்ளை நோய் சூழ­லில், தங்­க­ளின் மன­நலம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக வெவ்­வேறு ஆய்­வு­களில் பங்­கேற்ற சுமார் 35 முதல் 50 விழுக்­காட்­டி­னர் கூறி­உள்­ள­னர்.

'நேஷனல் கேர்': 1800 202 6868

மனநலக் கழகத்தின் 'மெண்டல் ஹெல்த்': 6389 2222

சமேரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்: 1800 221 4444

'சில்வர் ரிபன் சிங்கப்பூர்': 6385 3714

'டச்லைன்' ஆலோசனைச் சேவைகள்: 1800 377 2252