சமூகத் தொற்று இல்லை

சமூகத் தொற்று இல்லை

1 mins read
0f3a0a90-765f-4dda-8192-c924f06052e8
-

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்துள்ள ஐந்து பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாகப் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூகத்தில் கிருமித்தொற்றுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 58, 260க்கு உயர்ந்துள்ளது. மேல் விவரங்களை சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்கும்.

சனிக்கிழமையில் புதிதாக 13 கிருமித்தொற்றுச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் ஒன்று சமூகத்தொற்று என்றும் பாதிக்கப்பட்டவர் பிலிப்பீன்சைச் சேர்ந்த விமானச் சிப்பந்தி என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது. பாதிக்கப்பட்ட சிப்பந்தி ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.