வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் ஷேப்ஸ் அஃப் ஹோம்' புகைப்பட போட்டியில் தோ பாயோ சென்ட்ரலைக் காட்டும் கறுப்பு வெள்ளைப் படம் முதல் இடத்தை வென்றுள்ளது.
வீடமைப்பு வளர்ச்சி கழக புளோக்குகளையும் வெளிச்சமான பகல் வானத்திலுள்ள சில மேகங்களையும் ஸ்டீபன் ஸ்டபான் டான், 32, எடுத்துள்ள இந்தப் படம் காட்டுகிறது.
படத்தை எடுத்த பிறகு அதனை தற்போதைய நிலைக்குத் தயார்செய்ய 20 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக கடந்த ஒன்பது ஆண்டுகளாக புகைப்படக்கலையில் ஈடுபட்டுள்ள அவர் கூறினார்.
தேசிய பல்கலைக்கழக மாணவர் கென்னத் சாங்,25, எடுத்த 'த பின்னக்கல் அட் டக்ஸ்டன்' படம் இரண்டாவது பரிசைப் பெற்றது.

