வசதி குறைந்த மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அடுத்த ஆண்டு உதவிக்
கரம் நீட்ட $36 மில்லியன் நிதியை சீனர் மேம்பாட்டு உதவி மன்றம் ஒதுக்கியுள்ளது.
இந்தத் தொகையைப் பயன்
படுத்தி மாணவர்களுக்குப் பல பயிற்சித் திட்டங்களை நடத்த அது திட்டமிட்டுள்ளது. அவர்
களது கல்விக்காக $800 வரை ரொக்க மானியங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆதரவுத் திட்டங்களுக்கு மட்டுமின்றி கல்வியில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு உதவி செய்யவும் நிதி பயன்படுத்தப்படும் என்று மன்றம் தெரிவித்தது. கூடுதல் குடும்பங்களுக்கு உதவி தேவைப்படுவதால் கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாக ஆண்டு
தோறும் நடைபெறும் 'ரெடி ஃபார் ஸ்கூல்' நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட போக்குவரத்து அமைச்
சரும் மன்றத்தின் தலைவருமான ஓங் யி காங் கூறினார்.

