நீண்ட ஆயுள், நலமான வாழ்க்கை

மத்திய சேம நிதிக் கழகம் வழங்கும் விளம்பரச் செய்தி

மத்திய சேம நிதி சேமிப்பும் நீங்களும்

பெரும்பான்மை சிங்கப்பூரர்கள் அதிக வயது வரை உயிர் வாழும் தற்போதைய சூழலில், உங்கள் ஓய்வுக் காலத்தின்போது உங்கள் மத்திய சேம நிதி (மசேநி) சேமிப்பு எவ்வாறு உங்களுக்கு- குறிப்பாக அடிப்படைத் தேவைகளிலிருந்து சுகாதார, வீட்டுச் செலவுகள் வரை உதவும்? இதோ உங்களது கேள்விகள் சிலவற்றுக்கான பதில்கள்.

நான் 55 வயதானவுடன் அதிகபட்ச தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா?

அப்படி செய்யத்தேவையில்லை. பெற்ற பணம் உங்களுக்குத் தேவைதானா என்ற அடிப்படையில் நீங்கள் முடிவுசெய்யலாம். மசேநி உறுப்பினர்கள் 55 வயதில் முழுத்தொகையைப் பெற்றுக்கொண்டு அதை வங்கிகளில் கொடுத்துவைக்கும்போது குறைந்த வட்டியைப் பெறுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இத்தகைய உறுப்பினர்களுக்கு இது சிறந்த முடிவில்லை.

மசேநி திட்டத்தில் பணம் வைத்திருப்பது ஆண்டிற்கு 6% வரை வட்டியை அனுபவிப்பதற்கு வழி செய்யும். பரிந்துரைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனைத்து மசேநி உறுப்பினர்களும் 55 வயதை அடைந்தவுடன் பகுதியாகவோ, முழுமையாகவோ அவரவர் விரும்பும் நேரங்களில் மசேநி சேமிப்பினை திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை உடையவர்கள்.

நீங்கள் சிங்பாஸ் (SingPass) மறைச்சொல்லைப் பயன்படுத்தி, மசேநி வலைப்பக்கத்திற்குச் சென்று இணைய விண்ணப்பம் செய்து பேநவ் (PayNow) அல்லது ஜைரோ (GIRO) கட்டண முறைகளைக் கொண்டு உங்கள் சேமிப்புப் பணத்தைப் பெறலாம். பேநவ் (PayNow) கட்டண முறைப்படி பணத்தைப் பெறுவதற்கு நீங்கள் பேநவ் (PayNow) திட்டத்தில் பதிவு செய்துகொண்டு உங்கள் வங்கிக் கணக்கை சிங்கப்பூர் அடையாள அட்டையுடன் இணைத்து தற்போதைய வங்கியின் இணையத் தளங்கள் வழியாகவும் கைத்தொலைபேசி செயலி பயன்பாடுகள் மூலமாகவும் ஏற்பாடு செய்துகொள்ளலாம்.

நான் காலமானவுடன் எனது மசேநி சேமிப்பு என்னவாகும்?

உங்கள் மசேநி பணத்தைப் பெறுவதற்கு யாரையேனும் நீங்கள் நியமனம் செய்திருந்தால், மறைவிற்குப் பிறகு நிதி அவர்களுக்கு இயல்புநிலையில் அறிவுறுத்தியபடி பகிர்ந்து அளிக்கப்படும். அவ்வாறு நியமனம் செய்யாதிருந்தால், சிங்கப்பூரின் தொப்புள்கொடி உறவு சட்டத்தின்படியும் இஸ்லாமிய பரம்பரை சட்டத்தின்படியும், மசேநி கழகம் உங்களின் மசேநி சேமிப்புத் தொகையை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்து வழங்கும். இதன்வழி உங்களைச் சார்ந்தோரின் நலம் பேணப்படுவது உறுதிசெய்யப்படுகிறது.

மசேநி சேமிப்பைப் பெறுவதற்கு உயில் எழுதிவைக்கும் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மசேநி கழகம் அனைத்து உறுப்பினர்களையும் மசேநி சேமிப்பைப் பெறுவதற்கு முன்கூட்டியே நியமனம் செய்யவும் அவற்றை அடிக்கடி மறுபரிசீலிக்கவும் ஊக்குவிக்கிறது. உறுப்பினர்களின் மறைவுக்குப் பிறகு அவர்களின் விருப்பப்படி மசேநி சேமிப்புகள் பகிரப்படுவது இதன்வழி உறுதிசெய்யப்படுகின்றது.

மசேநி நியமனத்தை இணையத்தில் பாதுகாப்பான முறையில் வசதியாக செய்துகொள்ளலாம். மசேநி உறுப்பினரும் நியமிக்கப்பட்ட இரண்டு சாட்சிகளும் மசேநி இணையப்பக்கமான www.cpf.gov.sg முகவரிக்குச் சென்று சிங்பாஸ் (SingPass) மறைச்சொல்லை பயன்படுத்தி நேரடி இணைய விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யவேண்டும்.

சொத்தை விற்கும்போது ஏன் மசேநிதிக்கு நான் வட்டியைத் திரும்பத் தர வேண்டும்?

உங்களின் மசேநி தொகையைப் பயன்படுத்தி அந்த சொத்தை நீங்கள் வாங்காமல் இருந்திருந்தால் உங்களது மசேநி சேமிப்புக்கு வட்டி கிடைத்திருக்கும். சொத்தை விற்கும்போது, மசேநி தொகையை திரட்டப்பட்டிருக்கக்கூடிய வட்டியுடன் திரும்பத் தருவது, சொத்தை வாங்கும் முன் மசேநி கணக்கில் என்ன இருந்திருக்குமோ அதை நிலைநாட்ட மட்டுமே செயல்படுகிறது.

அதேவேளையில் முந்தைய சொத்து விற்பனையின் மூலம் திரும்பப்பெறப்பட்ட தொகை உள்பட மசேநி சேமிப்பை தொடர்ந்து பயன்படுத்தி நீங்கள் மற்றொரு சொத்தையும் வாங்கலாம்.

மசேநிதி சேமிப்பைப் பயன்டுத்தி சொத்துகள் வாங்கியபின் அவற்றைக் குறைவான விலையில் விற்கும்போது மசேநிக்கு முழுக் கடன் தொகையைச் செலுத்த கைப்பணம் தேவை என்று கவலையடையும் உறுப்பினர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். உங்கள் சொத்தை சந்தை விலையில் விற்றிருந்தால் குறைந்துள்ள தொகைக்கு ஈடாக நீங்கள் கைப்பணத்தைச் செலுத்தத் தேவையில்லை. இதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். இருப்பினும், வீடு வாங்குபவர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புத்தொகை, விற்பனை விலையின் ஒரு பகுதியாகும். பரிவர்த்தனை நிறைவடையும் முன் உங்கள் மசேநி கணக்கில் அத்தொகையை திருப்பியளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

வேலை ஓய்வுக்காலத்தில் மசேநி சேமிப்பு அதிகம் இல்லாதவர்கள் எனது பெற்றோர்கள். அவர்களது மசேநி சேமிப்பைத் தன்னிச்சையாக நான் எவ்வாறு நிரப்பலாம்?

தற்போதைய மேம்படுத்தப்பட்ட ஓய்வுக்கால தொகை திட்டப்படி (Enhanced Retirement Sum) அதிகபட்சத் தொகையான $ 271, 500 வரை அவர்களது ஓய்வுக்கால சேமிப்புக் கணக்கில் (CPF Retirement Accounts) நிரப்பி, 6% வருடாந்தர வட்டியைப் பெற்று தங்களது பெற்றோரின் மசேநி ஓய்வுக்காலச் சேமிப்பைப் பெருக்கலாம். கூடுதல் சேமிப்புகள் ஓய்வுக்காலக் கணக்கில் இருந்தால், அவர்கள் அதிக மாதாந்தர வழங்குதொகையை ஓய்வுபெறும்போது பெறுவார்கள். உங்களது பெற்றோர்களின் ஓய்வுக்கால கணக்கில் ரொக்கத்தை நிரப்பும்போது அவர்களது ஓய்வுக்காலச் சேமிப்பினை பெருக்குவதுடன் அதிகபட்சமாக $7,000 வரை ஆண்டு வருமான வரி விலக்கையும் நீங்கள் பெறலாம்.

இந்த இணைப்பை அணுகி மேல் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்:

https://www.cpf.gov.sg/Members/Schemes/schemes/retirement/retirement-sum-topping-up-scheme

முரசிடம் கேளுங்கள்: உங்கள் கேள்வி, எங்கள் பதில்

மத்திய சேம நிதி தொடர்பில் உங்களுக்கு ஏதாவது கேள்விகள் உள்ளனவா?

'முரசிடம் கேளுங்கள்' என்ற புதிய கேள்வி பதில் தொடருடன் எங்களோடு இணைக.

கேள்விகளை tamilmurasu@sph.com.sg எனும் இணைய முகவரிக்கு அனுப்புங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!