தெமாசெக் அறநிறுவனம் வழங்கும் கொவிட்-19 பரிசோதனை பயிற்சித் திட்டம்

தெமாசெக் அறநிறுவனம் வழங்கும் கொவிட்-19 பரிசோதனை பயிற்சித் திட்டம்

3 mins read
8ab7339a-8a31-41b6-8eea-148073bc1fa0
RNA பரிசோதனை பயிற்சித்திட்ட மாணவர்களுடன் டாக்டர் அமலதாஸ் அன்புராஜ் (இடக்கோடி). படம்: இந்து இளங்கோவன் -

இந்து இளங்­கோ­வன்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்­பி­லி­ருந்து குண­மடைந்­தோர் எண்­ணிக்கை 58,152 எட்­டி­யுள்­ளது. தடுப்பு மருந்­து­கள் உரு­வாக்க சோத­னை­கள் ஒரு பக்­கம் நடை­பெற்று வந்­தா­லும் மருத்­து­வத்­ துறை­யி­ன­ரின் தன்­ன­ல­மற்ற சேவை­யால் கிரு­மித்­தொற்று பாதிப்­பி­லி­ருந்து பலர் குண­மாகி வரு­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை என்­பது இந்த 11 மாதங்­களில் நடை­பெற்ற கிரு­மித்­தொற்று தடுப்பு முயற்­சி­யில் மிகப் பெரிய பங்கை வகுத்­தி­ருக்­கிறது.

இந்­தப் பரி­சோ­தனை முறை­யின் மிக முக்­கி­ய­மான கட்­டம்­தான் 'ஆர்­என்ஏ டெஸ்­டிங்' எனப்­படும் 'ரிபோ­நி­யூக்­ளிக்' அமி­லப் பரி­சோ­தனை.

நமது நாடு தொடர்ந்து இந்­தக் கிரு­மித்­தொற்றை ஒழிக்­கப் போராடி வரும் நிலை­யில், இந்த 'ஆர்­என்ஏ' பரி­சோ­த­னைக்­கான அவ­சி­யம் அதிகரித்துள்ளது.

இந்­தப் பரி­சோ­த­னையை செய்­யக்­கூ­டிய சிறப்பு ஆய்­வ­கத் தொழில்­நுட்ப வல்­லு­நர்­களை உரு­வாக்க தெமா­செக் அற­நி­று­வ­னம், தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மற்­றும் வேலை நிய­மன, வேலைத்­தகு­திக் கழ­கத்­து­டன் இணைந்து இரண்டு வாரப் பயிற்­சித் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

பயிற்­சித் திட்­டம் கடந்த செப்­டம்­பர் மாதம் 14ஆம் தேதி தொடங்­கி­யது. பயிற்­சி­யின் முதல் வாரத்­தில், தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பாடங்­கள் நடத்­தப்­பட்­டன.

அதன் பிறகு பங்­கேற்­பா­ளர்­கள் தெமா­செக்­கு­டன் பணி­யாற்­றும் ஆய்­வ­கங்­க­ளு­டன் இணைக்­கப்­பட்டு கொவிட்-19 சோதனை முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

"சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்­தி­ருந்­தா­லும் அதற்­கான பரி­சோ­த­னை­கள் குறை­ய­வில்லை. வர்த்­த­கங்­கள், பய­ணத்­துறை, மனி­த­வ­ளம், பொரு­ளி­யல் என இன்­னும் இந்த கிரு­மித் தொற்­றால் பலவும் பாதிக்­கப்­பட்ட நிலை­யில் உள்­ளன.

"இந்­தியா, மலே­சியா, இந்­தோனீ­சியா, ஹாங்­காங் போன்ற நம்­மைச் சுற்­றி­யுள்ள நாடு­க­ளி­லி­ருந்து மக்­களை சிங்­கப்­பூ­ருக்­குள் வர அனு­ ம­திக்­கும் கட்­டத்­தில் இந்­தப் பரி­சோ­த­னைக்­கான அவ­சி­யம் மேலும் அதி­க­ரிக்­கும். பாது­காப்பு, சோதனை செயல்­பாட்டு முறை­கள், 'பைப்­பெடிங்' சோதனை என மாண­வர்­களை சிறந்த முறை­யில் ஆயத்­தப்­ப­டுத்­தும் வகை­யில் இப்­பாடத்­திட்­டம் அமைந்­துள்­ளது," என்று தெரி­வித்­தார் இந்­தப் பாட­நெ­றி­யைக் கற்­றுக்­கொ­டுக்­கும் தலை­மைப் பொறுப்பை ஏற்­றுள்ள தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் விரி­வு­ரை­யா­ள­ரும் ஆராய்ச்­சி­யா­ள­ரு­மான டாக்­டர் அம­ல­தாஸ் அன்­பு­ராஜ்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள், தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­கள் மட்­டும் அல்­லா­மல் பொது­மக்­களும் இந்­தப் பயிற்­சித் திட்­டத்­தில் பங்­கேற்று தங்­க­ளது திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

மேலும், ஆய்­வ­கத் தொழில்­நுட்ப வல்­லு­நர்­கள் மற்­றும் மருத்­துவ ஆய்­வக உத­வி­யா­ளர்­கள், ஆய்­வ­கங்­களில் கொவிட்-19 சோதனை எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கிறது என்­பதைப் பற்றி கற்­றுக்­கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் தெரி விக்கப்பட்டது.

சிங்­கப்­பூர் சுகா­தார அமைச்சு, உலக சுகா­தார நிறு­வ­னம் கொவிட்-19 பர­வலை முன்­னிட்டு விதித்­துள்ள நெறி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­கிறது.

இந்த நெறி­மு­றை­க­ளின்­படி கொவிட்-19 கிரு­மித்­தொற்றுப் பரி­சோ­தனை செயல்­மு­றை­யில் 'Confirmatory Test' என்று அழைக்­கப்­ப­டக்­கூ­டிய ஒரு பரி­சோ­த­னையை செய்ய­ வேண்­டும்.

'ரிபோ­நி­யூக்­ளிக்' அமி­லம் மர­பணு தொடர்­பு­டைய இந்த கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் முதல் கட்­டப் பரி­சோ­தனை, மூக்­கின் வழி திரவ மாதி­ரியை எடுப்­பது. இதி­லி­ருந்து கிடைக்­கும் மாதி­ரி­யைக் கொண்டு ஒரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று உள்­ளதா இல்­லையா என்­பதை உறுதி செய்ய முடி­யாது.

அந்த மாதி­ரியை மருந்­தக ஆய்­வ­கங்­க­ளுக்கு அனுப்பி 'ரிபோ­நி­யூக்­ளிக்' அமில பரி­சோ­த­னை­யின் மூலம் கொரோனா உள்­ளதா என்­பதை உறு­தி­செய்ய வேண்­டும். இந்த பரி­சோ­த­னை­யின் செயல்­மு­றையை இந்­தப் பயிற்­சித் திட்­டத்­தில் மாண­வர்­கள் கற்­றுக்­கொள்­கின்­ற­னர் என்றும் விளக்கப்பட்டது.