பீஷானில் பயிற்சிப் பயிலகம்; மின்சார வாகன பழுதுபார்ப்பு போன்ற சேவைகளைக் கற்க வசதி

2 mins read
5bad6d5d-2da8-48eb-8baf-cc7494a1b6d7
(வலமிருந்து) சிங்­கப்­பூர் மோட்­டார்வாகன பணி­மனைச் சங்­கத்தின் தலைவர் ஹென்றி லியாங், போக்­கு­வ­ரத்து, வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட்டுக்கு பணிமனைப் பயிலகத்தில் இடம்பெற்றுள்ள பல அம்சங்களையும் தொழில்நுட்பங்களையும் விளக்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் புதிய பணி­மனை பயிற்­சிப் பயி­ல­கம் ஒன்று திறக்­கப்­பட்டு இருக்­கிறது. அதில் மின்­சா­ரத்­தில் ஓடும் வாக­னங்­களைப் பழு­து­பார்ப்­பது உள்­ளிட்ட பல தேர்ச்சி­க­ளை மோட்­டார் பணி­மனைத் தொழில்­நுட்­பர்­கள் கற்­றுக்­கொள்­வார்­கள்.

சிங்­கப்­பூர், 2040ஆம் ஆண்டு வாக்­கில் பெட்­ரோல், டீச­லில் இயங்­கும் உள்­ளெரி இயந்­தி­ரங்­க­ளைக் கொண்ட வாக­னங்­களை அகற்ற இருக்­கிறது.

இந்த நிலை­யில், புதிய பயிற்­சிப் பயி­ல­கம் இங்கு திறக்­கப்­பட்டு உள்­ளது. அந்த நிலை­யத்­தில் அடுத்த மூன்று ஆண்­டு­களில் 10,000 தொழில்­நுட்­பர்­களில் சுமார் 1,000 பேருக்­குப் பயிற்சி அளிக்­கப்­படும் என்று சிங்­கப்­பூர் மோட்­டார் வாகன பணி­ம­னைச் சங்­கம் தெரி­வித்­தது.

இந்­தச் சங்­கத்­தின் புதிய பயிற்­சிப் பயி­ல­கம் பீஷா­னில் உள்ள சிங் மிங் ஆட்­டோ­சிட்­டி­யில் நேற்று திறக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் மின்­சார வாக­னங்­களின் பய­னீடு அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அதைக் கருத்­தில்­கொண்டு தொழில்­நுட்­பர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி அளித்து அவர்­க­ளின் ஆற்­றலை மேம்­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­கிறது என்று இந்­தச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

புதி­தாக ஏற்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கும் பயி­ல­கம், மோட்­டார் வாகன பணி­ம­னைச் சேவை தொழில்­துறை­யின் உரு­மாற்­றத்­துக்கு ஆத­ரவு அளிக்­கும் என்று இந்­தச் சங்­கத்­தின் தலை­வர் மைக் கே குறிப்­பிட்­டார். இந்­தப் பயி­ல­கத்தை அமைக்க பல்­வேறு அர­சாங்க அமைப்­பு­கள் உதவி இருக்­கின்­றன.

போக்­கு­வ­ரத்து, வெளி­யு­றவு மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் பயி­ல­கத்தை நேற்று திறந்­து­வைத்­தார்.

கரி­மப் புகையை வெளி­யி­டாத வாக­னங்­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்ற இலக்கை நிறை­வேற்றுவதற்­கான ஆயத்­தப் பணி­கள் முன்­ன­தா­கவே தொடங்க வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­தி­னார்.

அத்­த­கைய வாக­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வது உறு­தி­யா­கி­விட்ட நிலை­யில் இது அவ­சி­யம் என்­றார் அவர்.

ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தில் முத­லீடு செய்­யு­மா­றும் வேலை நடை­மு­றை­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கு­மா­றும் அமைச்­சர் மோட்­டார்வாக­னச் சேவைத் தொழில்­து­றையை வலி­யு­றுத்­தி­னார்.

இத­னி­டையே, பணி­ம­னை­க­ளுக்­கான புதிய நடை­முறை நிய­தி­களும் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. அவை பயிற்சி பெறும் ஊழி­யர்­கள் தொடர்­பா­க­வும் சேவை­களை மேம்­ப­டுத்­து­வ­தன் தொடர்­பி­லும் வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைக் கொண்­டுள்­ளன.

இந்த நெறி­மு­றை­கள், இந்­தச் சேவைத் துறை மேம்­ப­டு­வ­தற்கு மிக­வும் பய­னுள்ள ஒன்று என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.