சிங்கப்பூர் மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக அனைத்துலக ஆய்வு ஒன்றில், கணிதம் மற்றும் அறிவியலில் முதலிடம் பெற்றுள்ளனர். 'தி டிரெண்ட்ஸ் இன் இண்டர்நேஷனல் மெத்தமேட்டிக்ஸ் அண்ட் சைன்ஸ் ஸ்டடி' எனப்படும் இந்த ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. நான்காவது, எட்டாவது கல்வி நிலைகளில் பயிலும் மாணவர்களை இது சோதிக்கிறது. அதாவது, இங்கு தொடக்கநிலை 4, உயர்நிலை 2ல் பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இரண்டு நிலைகளிலும் இரண்டு பாடங்களிலும் சிங்கப்பூர் மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். தென்கொரியா, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை அவர்கள் பின்னுக்குத் தள்ளினர்.
கணக்கு, அறிவியல் பாடத்தில் சிங்கப்பூர் மாணவர்கள் மீண்டும் முதலிடம்
1 mins read
(கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

