உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் ஆடவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏமனிய உள்நாட்டுப் போரில் பங்கேற்றது, அந்நாட்டில் இருந்துகொண்டு வெளிநாட்டிடமிருந்து பணம் வாங்கி அதன் முகவராகப் பணியாற்றியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் 48 வயது ஆடவர் ஷெய்க் ஹைக்கல் காலிட் பஃபானா கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரின் பாதுகாப்புக்கும் ஆர்வங்களுக்கும் பங்கம் விளைவிக்கும் விதத்தில் பஃபானா நடந்துகொண்டதாக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (ஐஎஸ்டி) தெரிவித்தது.
ஆயுத வன்முறையில் ஈடுபடுவது மட்டுமின்றி அதற்கு துணைபுரிவது, ஆதரிப்பது, பிறரை ஆதரிக்கும்படி தூண்டுவது ஆகிய செயல்களில் ஈடுபடும் எவராயினும் அவருக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டிருப்பதாக ஐஎஸ்டி தெரிவித்தது.

