வெளிநாட்டில் இருந்து வந்த அறுவருக்கு பாதிப்பு

வெளிநாட்டில் இருந்து வந்த அறுவருக்கு பாதிப்பு

1 mins read
a881187d-923a-4bb4-ad96-d52cdc7250e7
-

சிங்கப்பூரில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி புதிய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.

புதிதாகக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வந்த 6 பேருக்கு, சிங்கப்பூர் வந்தவுடன், வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று என்று சுகாதார அமைச்சின் முதற்கட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சு, இன்றிரவு வெளியிடவிருக்கும் செய்தி அறிக்கையில், மேல் விவரங்களைத் தெரிவிக்கும்.

இன்று காலையில், 'ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் சொகுசுக் கப்பல் நடத்துனரின் 'குவாண்டம் ஆஃப் தி சீஸ்' கப்பலில் சென்ற 83 வயது சிங்கப்பூர் ஆடவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டார். மேல் பரிசோதனைகளில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், கிருமித்தொற்று சம்பவங்களின் அன்றாட கணக்கெடுப்பில், அவர் சேர்க்கப்படுவார் என அமைச்சு கூறியது.