பிடோக்கில் திங்கட்கிழமையன்று நடந்த ஒரு விபத்தில், மாது ஒருவர் பேருந்தின் பின்சக்கரம் அடியில் மாட்டிக்கொண்டார். 54 வயதுடைய அந்த மாது, பிடோக் ரெசர்வோர் ரோடு, பிடோக் நார்த் ரோடு சந்திப்பில் சாலையைக் கடந்துகொண்டிருந்தார். கிட்டத்தட்ட சாலையின் நடுவே அவர் நடந்துகொண்டிருந்தபோது வலது பக்கமாகத் திரும்பிய எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஒன்று, அவர் மீது மோதியது. இவ்விபத்தைக் காட்டும் காணொளி, 'ரோட்ஸ்.எஸ்ஜி' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த மாது, பின்சக்கரம் ஒன்றுக்கு அடியில் சிக்கிக்கொண்டு விடுபட முடியாமல் இருப்பதையும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு உதவ ஓடுவதையும் காண முடிகிறது. சாங்கி பொது மருத்துவமனைக்கு மாது கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார் என்று போலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.
சாலையைக் கடந்தவர் பேருந்து பின்சக்கரத்தில் சிக்கிக்கொண்டார்
1 mins read
-

