இளங்கலைஞர் விருது பெற்ற சுஷ்மா

இந்த ஆண்­டுக்­கான இளங்­க­லை­ஞர் விரு­தைப் பெற்ற நான்கு வள­ரும் கலை­ஞர்­களில் கர்­நா­டக இசைக் கலை­ஞர் சுஷ்மா சோம­சே­க­ரும் ஒரு­வர்.

சிங்­கப்­பூ­ரின் மிக உய­ரிய கலை, இலக்­கிய விரு­தான கலா­சார பதக்­கம், பாத்­திக் ஓவி­யக் கலை­ஞ­ரான 80 வயது திரு சர்­காசி, பல்­லூ­டக ஓவி­யக் கலை­ஞ­ரான 59 வயது டாக்­டர் வின்­சென்ட் லியாவ் ஆகிய இரு­வ­ருக்­கும் இவ்­வாண்டு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்­து­லக அங்­கீ­கா­ரம் பெற்ற கலை­ஞ­ரான 33 வயது திரு­மதி சுஷ்மா, ஆய்­வா­ளர், கல்­வி­யா­ளர், எழுத்­தா­ளர் என பல பரி­மா­ணங்­க­ளைக் கொண்­ட­வர். ஐந்து வயது முதல் வாய்ப்­பாட்டு இசை­யில் ஈடு­பட்­டுள்ள இவர், சென்­னை­யில் ‘தி மெட்­ராஸ் மியூ­சிக் அகெ­டமி’, ‘தி பவன் லண்­டன்’, பிர­சல்­சி­லுள்ள இந்­திய தூத­ர­கம் போன்ற இடங்­களில் கச்­சேரி செய்த பெரு­மை­யைப் பெற்­ற­வர்.

“கர்­நா­டக இசைக்­க­லைக்கு அங்­கீ­கா­ர­மும் மரி­யா­தை­யும் கிடைக்­கும் வித­மாக இந்த விருது அமைந்­துள்­ளது,” என தமிழ் முர­சி­டம் கூறிய சுஷ்மா, தம்மை ஒரு சிறந்த கலை­ஞ­ராக உரு­வாக்­கிய தமது குடும்­பத்­தி­ன­ருக்­கும் குரு ஆர் கே ஸ்ரீராம் குமார், பாக்­யா­மூர்த்தி ஆகி­யோ­ருக்­கும் நன்றி தெரி­வித்­தார்.

கணக்­கி­யல் துறை பட்­ட­தா­ரி­யான சுஷ்மா, இசை மீது கொண்ட ஆர்­வத்­தி­னால் முழு நேரக் கலை­ஞ­ராக பரி­ண­மித்து வரு­கி­றார்.

ஓவி­யக் கலை­ஞர் டாக்­டர் யான்­யுன், 34, ஆங்­கில மலாய் நாட­கக் கலை­ஞர் இர்­ஃபான் கஸ்­பான், 33, திரைத்­து­றைக் கலை­ஞர் நிக்­கல் மிடோரி ஊட்­ஃபர்டு, 34, ஆகி­யோர் இவ்­வாண்டு இளங்­க­லை­ஞர் விருது பெறும் ஏனை­ய­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் இளம் கலை­ஞர்­களை ஊக்­கு­வித்து வளர்க்­கும் நோக்­கில் 1992ல் தொடங்­கப்­பட்ட இந்த தேசிய விருதை இவ்வாண்டுடன் 163 பேர் பெற்­றுள்­ள­னர். நிகழ்­க­லைக் கலை­ஞர் டாக்­டர் எஸ்.சந்­தி­ர­சே­க­ரன், நட­னக் கலை­ஞர்­கள் நிர்­மலா சேஷாத்­திரி, மீனாட்சி பாஸ்­கர், தமிழ்­வா­ணன் விஷ்ணு, இசைக் கலை­ஞர்­கள் கான­வி­னோ­தன் ரத்­னம், அர­விந்த் குமா­ர­சாமி ஆகி­யோர் இவ்­வி­ரு­தைப் பெற்ற ஏனைய தமிழ்க் கலை­ஞர்­கள். உன்­னத கலை ஆற்­றல் பெற்ற 35 வய­தும் அதற்­கும் குறைந்­த­வர்­க­ளுக்கு இவ்­வி­ருது வழங்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் கலை, கலா­சார மேம்­பாட்­டுக்கு பங்­க­ளித்த தலை­சி­றந்த கலை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­படும் கலா­சார பதக்­கம் 1979ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது. இது­வரை 128 கலை­ஞர்­கள் இவ்­வி­ரு­தைப் பெற்­றுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!