பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்க நிலைத் தேர்வு (ஜிசிஇ 'என்' நிலை) முடிவுகள் வரும் 17ஆம் தேதி வெளியிடப்படும்.
கொவிட்-19 சூழல் காரணமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் பள்ளியிலோ இணையத்திலோ பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் அறிவித்துள்ளது.
"தேர்வு முடிவுகளைப் பெறும் மாணவர்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்," என்று அறிக்கை குறிப்பிட்டது. உடல் நலமில்லாத, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு பெற்ற மாணவர்கள் பள்ளி களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. அவர்கள், தேர்வு முடிவுகளை இணையம் வழி பிற்பகல் 2.30 முதல் தெரிந்துகொள்ளலாம்.
தங்கள் சார்பாக முடிவுகளைப் பெற ஒருவரை மாணவர்கள் நியமிக்கலாம்.
தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் அஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும்.

