சிறப்புத் தேவையுடைய ஏழு பள்ளிகள் 2022ஆம் ஆண்டு முதல் நிரந்தர இடங்களில் செயல்படும்

அர­சாங்­க நிதி ஆத­ர­வு­டன் இயங்­கும் ஏழு சிறப்­புத் தேவைப் பள்­ளி­கள் 2022ஆம் ஆண்­டி­லி­ருந்து படிப்­ப­டி­யாக அவற்­றின் புதிய வளா­கங்­களில் செயல்­படும்.

மித­மா­னது முதல் கடு­மை­யான கல்­வித் தேவை­கள் உடைய மாண­வர்­க­ளுக்­குச் சிறப்­புத் தேவை பள்­ளி­கள் கிடைக்­கச் செய்­யும் தனது முயற்­சி­களில் இது­வும் ஒன்று என்று கல்வி அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக இந்­தப் புதிய பள்­ளி­கள் குறித்து கல்வி அமைச்சு அவ்­வப்­போது அறி­வித்து வந்­துள்­ளது.

சமூக சேவை அமைப்­பு­க­ளான ‘அவ்வா’ எனப்­படும் ஆசிய மக­ளிர் நல்­வாழ்­வுச் சங்­கம், சிங்­கப்­பூர் ஆட்­டி­சம் சங்­கம், ரெயின்போ நிலை­யம், மெட்டா நல்­வாழ்­வுச் சங்­கம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து பணி­யாற்றி நான்கு புதிய சிறப்­புத் தேவைப் பள்­ளி­களை அமைக்க ஆவன செய்­யப்படும் என்று கல்வி அமைச்சு 2017 முதல் 2019 வரை வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருந்தது.

அறி­வாற்­றல் குறை­பாடு உடைய ஆட்­டி­சம் மாண­வர்­க­ளுக்­கான பள்ளி­க­ளின் தேவை அதி­க­ரித்து வரு­வ­தன் கார­ண­மாக இந்த நட­வ­டிக்கை அறி­விக்­கப்­பட்­டது.

ஈடன் பள்ளி 2, அவ்வா பள்ளி 2, ரெயின்போ நிலை­யப் பள்ளி 2, மெட்டா பள்ளி 2 ஆகி­ய­வையே அந்த நான்கு சிறப்­புத் தேவைப் பள்­ளி­கள்.

பள்­ளி­ப் பதிவின்­போது, அந்­தப் பள்ளி அதன் நிரந்­தர வளா­கத்­துக்கு மாறு­வ­தற்கு முன், இந்த நான்கு பள்­ளி­க­ளுக்­கு­மான அதி­கா­ரத்­துவ பெயர்­கள் வெளி­யி­டப்­படும் என்று கூறிய அமைச்சு, இப்­போ­தைக்கு பள்­ளியை நடத்­தும் சம்­பந்­தப்­பட்ட சமூக அமைப்­பின் பெயரே பள்­ளிக்குத் தற்­கா­லி­க­மாக வைக்­கப்­பட்­டுள்­ளது என்று விவ­ரித்­தது.

ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் ஓராண்­டுக்கு 25 இடங்­கள் ஒதுக்கப்­படும். முடி­வில் ஒவ்­வொரு பள்­ளி­யி­லும் மொத்­தம் 300 மாண­வர்­கள் பயில்­வார்­கள். தற்­போ­தைய நிலை­யைக் காட்­டி­லும் அந்த நான்கு பள்­ளி­களி­லும் கூடு­த­லாக 1,200 இடங்­கள் இருக்­கும்.

2022ஆம் ஆண்­டி­லி­ருந்து ஈடன் பள்ளி 2, புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட் அவென்யூ 2ல் உள்ள முன்­னாள் ஹோங் கா தொடக்­கப் பள்ளி வளா­கத்­தி­லும், அவ்வா பள்ளி 2, பிடோக் ரெசர்­வோர் கிர­சென்ட்­டில் உள்ள பிடோக் வெஸ்ட் தொடக்­கப் பள்ளி வளா­கத்­தி­லும், ரெயின்போ நிலை­யப் பள்ளி 3, அல்­மி­ரல்டி லிங்க், அட்­மி­ரல்டி லேன் சந்­திப்­பில் உள்ள வளா­கத்­தி­லும் செயல்­படும்.

2024ஆம் ஆண்டு முதல் மெட்டா பள்ளி 2, பாசிர் ரிஸ் ஸ்தி­ரீட் 51ல் உள்ள முன்­னாள் கோரல் தொடக்­கப் பள்ளி வளா­கத்­தில் செயல்­படும்.

மொத்­தத்­தில், 2021ம் ஆண்டு முதல் ஆட்­டி­சம் அறி­வாற்­றல் குறை­பாடு உள்ள மாண­வர்­க­ளுக்­காக ஆறு சிறப்­புத் தேவைப் பள்­ளி­கள் இருக்­கும். ஈடன் பள்ளி, செயின்ட் ஆண்ட்­ரூஸ் ஆட்­டி­சம் பள்ளி ஆகி­யவை மற்ற இரண்டு பள்­ளி­கள்.

மித­மான ஆட்­டி­சம் அறி­வாற்­றல் குறை­பாடு உடைய மாண­வர்­க­ளுக்­காக மேலும் மூன்று பள்­ளி­கள் அமைக்­கப்­படும். அவற்­றில் இரண்டை சிங்­கப்­பூர் ஆட்­டி­சம் வள­நி­லை­யம், 2024ல் பாத்­லைட் பள்ளி 2 என்ற பெயரிலும், 2027ல் பாத்­லைட் பள்ளி 3 என்ற பெயரிலும் நடத்­தும்.

மூன்­றா­வது பள்­ளியை செயின்ட் ஆண்ட்­ரூஸ் மிஷன் மருத்­து­வ­மனை 2022ஆம் ஆண்டு நடத்­தும் என்றும் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!