மாற்றுப் புரதத் தொழில்முனைவரின் கனவு: விண்வெளி வீரர்களுக்கு நுண்பாசி உணவு

மாற்றுப் புரதத் தொழில்முனைவரின் கனவு: விண்வெளி வீரர்களுக்கு நுண்பாசி உணவு

2 mins read
51f0c41d-ab59-43bd-bd83-562ef1789cbb
தமது ஆய்வகத்தில் தயாரான தாவர 'ஹலால்' நண்டு கேக் மாதிரியை அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் காட்டுகிறார் 'சோஃபிஸ் பயோநியூட்ரியன்ட்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகி யூஜின் வாங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விண்­வெ­ளியை ஆரா­யும்­பொ­ழுது விண்­வெளி வீரர்­களுக்கு நீண்­ட­கா­லத்­திற்­குக் கெட்­டுப் போகாத, சுவை­யான, ஊட்­டச்­சத்­து­மிக்க உணவை வழங்­க­வேண்­டும் என்­பதே தொழில்முனை­வர் யூஜின் வாங்­கின் கனவு. நுண்­பா­சி­க­ளைக் கொண்டு தமது கனவை நன­வாக்குவது இவரது இலக்கு.

அதிக புர­தச்­சத்து கொண்­டு உள்ள தாவ­ர­மான சோயா அவ­ரை­யில் 30% புர­தச்­சத்து இருக்­கிறது. மாறாக, தாதுப்­பொ­ருள்­களும் உயிர்ச்­சத்­து­களும் நிரம்­பிய நுண்­பா­சி­களில் 60% புர­தச்­சத்து இருக்­கிறது.

உயிர்­வி­னைக்­க­ல­னுள் நுண்­பா­சி­களை நொதிக்க வைக்­கும்­பொ­ழுது, மூன்று நாள்­க­ளுக்­குள் அவை உண்­ணத் தகுந்த புர­த­மாக மாறி­வி­டு­கின்­றன. அவற்­றைக் கொண்டு பல்­வேறு தாவர உணவு­ வ­கை­க­ளைத் தயா­ரிக்­க­லாம்.

"சிறிய அள­வி­லான உயிர்­வினைக்­க­லனை வடி­வ­மைத்து, அதை விண்­க­ல­னில் பொருத்­தி­வி­ட­லாம்," என்­கி­றார் திரு வாங்.

ஆனால், அதற்­கு­முன் சிங்­கப்­பூர் மக்­க­ளுக்கு உண­வ­ளிக்க விரும்­பு­கி­றார் 'சோஃபிஸ் பயோ­நி­யூட்­ரி­யன்ட்ஸ்' உண­வுத் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யான திரு வாங்.

நுண்­பா­சி­களை உண்­ணத்­தகுந்த புர­த­மாக மாற்­றும் செயல்­மு­றையை முழு­மை­யாக்­கி­விட்ட அந்­நி­று­வ­னம், 'அறி­வி­யல் பூங்கா 2'ல் தனது உற்­பத்தி நிலை­யத்தை அமைக்­கத் தயா­ராகி வரு­கிறது. அடுத்த ஆண்டு பிற்­பா­தி­யில் அந்­நி­லை­யம் செயல்­பாட்­டிற்கு வரும்.

மொத்­தம் 464 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அமை­யும் அந்த உற்­பத்தி நிலை­யத்­தில் 2,000 லிட்­டர் முதல் 20,000 லிட்­டர் வரை­யி­லான உயிர்­வி­னைக்­க­லன்­கள், தெளிப்பு உலர்த்­தி­கள் போன்ற சாத­னங்­களைக் கொண்­டி­ருக்­கும்.

புதிய நிலை­யத்­தில் அமை­யும் 20,000 லிட்­டர் கொள்­ள­ளவு கொண்ட உயிர்­வி­னைக்­க­ல­னில் இருந்து ஒரு மாதத்­திற்கு 10 டன் புரத மாவைத் தயா­ரிக்­க­லாம் என திரு வாங் குறிப்­பிட்­டார்.

"ஒரு டன் சோயா புர­தம் தயா­ரிக்க ஐந்து ஹெக்­டர் நிலம் தேவை. ஆனால், எங்­க­ளுக்கு 0.02 ஹெக்­டர் நிலம் போதும்," என்­கி­றார் 'சோஃபிஸ் பயோ­நி­யூட்­ரி­யன்ட்ஸ்' தலை­மைச் செயல் அதி­காரி பார்­ன­பாஸ் சான்.

'ஏ ஸ்டார்' எனும் அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்­பின் சிங்­கப்­பூர் உணவு, உயிர்­தொ­ழில்­நுட்ப புத்­தாக்க நிலை­யத்­தில் அமைந்­துள்ள அந்­நி­று­வ­னத்­தின் ஆய்­வ­கத்தை அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று பார்­வை­யிட்­டார்.

அதற்­குப்­பின் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அதி­பர் ஹலிமா, "மாற்று உணவு மூலங்­க­ளுக்­கான எல்­லாத் தெரி­வு­க­ளை­யும் ஆராய வேண்­டி­யது அவ­சி­யம். அதன்­மூலம் இன்­னும் பத்­தாண்­டு­க­ளுக்­குள் தனது ஊட்­டச்­சத்து தேவை­யில் 30 விழுக்­காட்டை தானே தயா­ரிக்க வேண்­டும் எனும் இலக்கை சிங்­கப்­பூர் அடைய முடி­யும்," என்­றார்.

வானிலை, பரு­வ­நிலை மாற்­றங்­களும் கரி­ய­மி­ல­மாயு வெளி­யீட்­டைக் குறைக்க வேண்டி இருப்­ப­தும் பாரம்­ப­ரிய முறைப்­படி மட்­டும் உணவை உற்­பத்தி செய்­வதில் சிர­மத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன என்­றும் திரு­வாட்டி ஹலிமா சொன்­னார்.

உணவு மீள்திறன் கொண்ட நாடாக சிங்கப்பூரை மாற்ற உதவ, அதிக மாற்றுப் புரத நிறுவனங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்