'மின்னிலக்கமயச் சூழலில் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும்'

2 mins read
f450478f-61d0-4aee-af68-028322194ce3
படம்: சாவ் பாவ் -

கொவிட்-19 நோய்ப் பர­வல் ஏற்­படுத்­திய நெருக்­க­டி­யால் முன்­னெப்­போ­தும் இல்­லாத வேகத்­தில் அதிக நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­ம­ய­மாகி வரு­கின்­றன; தனி­ம­னி­தர்­கள் இணை­ய­வெ­ளியை அதி­கம் பயன்­படுத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர்.

அதே வேளை­யில், கியூ­ஆர் குறி­யீடு மோச­டி­கள், வாட்ஸ்­அப் கணக்­கைத் திரு­டு­தல், தகவல் திருட்டு 'ஃபிஷிங்' மின்­னஞ்­சல்­கள் போன்ற வழி­களில் இணை­யப் பாது­காப்பு தொடர்­பான அபா­யங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன.

இத்­த­கைய சூழ­லில், இணை­யத்­தில் மறைந்­தி­ருக்­கும் ஆபத்­து­கள் குறித்­தும் அவற்­றில் இருந்து காத்­துக்­கொள்­வது எப்­படி என்­பது குறித்­தும் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளி­தழ் நேற்று ஏற்­பாடு செய்­து இ­ருந்த 'மின்­னி­லக்­க­ம­ய­மும் இணை­யப் பாது­காப்­பும்' எனும் இணை­யக் கருத்­த­ரங்­கில் பங்­கேற்ற நிபு­ணர்­கள் நால்­வர் தங்­க­ளது கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்­பின் தலைமை நிர்­வாகி டேவிட் கோ, கடந்த ஆண்­டில் 'ரேன்­சம்­வேர்' முறையில் பணம் கேட்டு மிரட்­டிய 35 சம்­ப­வங்­கள் இடம்­பெற்ற நிலை­யில், இவ்­வாண்­டின் முதல் பத்து மாதங்­களில் அத்­த­கைய 60 சம்­ப­வங்­கள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.

சிங்­கப்­பூ­ரில் இணை­யப் பாது­காப்பு குறித்த பொது­வான விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­து­வ­தற்­காக சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்­பா­னது கடந்த அக்­டோ­ப­ர் மாதம் 'பாது­காப்­பான இணை­ய­வெளிப் பெருந்­திட்­டத்தை' அறி­முகப்­ப­டுத்­தி­யது. இல­வச இணை­யப் பாது­காப்­புப் பரி­சோ­தனை, முக்­கிய உள்­கட்­ட­மைப்­பு­க­ளுக்கு ஏதே­னும் பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­கள் உள்­ள­னவா என்­பதை அறிய செயற்கை நுண்­ண­றி­வுத் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­வது உள்­ளிட்­டவை அதில் அடங்­கும்.

சிங்­கப்­பூ­ரின் நீர் விநி­யோ­கத்­தைப் பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் நிர்­வ­கிப்­பது போலவே இணை­யப் பாது­காப்பு அமைப்பு செயல்­பட முயல்­வ­தாக திரு கோ குறிப்­பிட்­டார்.

குறிப்புச் சொற்கள்