காலணிக்குள் கேமராவை வைத்து 3,000 ஆபாசப் படங்கள் எடுத்த மருத்துவருக்கு சிறை

காலணிக்குள் கேமராவை வைத்து 3,000 ஆபாசப் படங்கள் எடுத்த மருத்துவருக்கு சிறை

1 mins read
bd0128db-13a8-4ffe-8592-acb2b5e78036
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனது காலணியில் கேமரா ஒன்றை மறைத்தவாறு பெண்களின் பாவாடைக்குள் 3,000க்கும் மேற்பட்ட காணொளிகளைப் பதிவு செய்திருந்த மருத்துவர் ஒருவருக்கு மூன்றாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலையான இத்தகைய பாலியல் ரீதியான குற்றவாளிகளில் மோசமான ஒருவர் 28 வயது சு பென் வீ, என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸ்‌ருதி போபனா இன்று கூறினார்.

கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தி தனது குற்றச்செயல்களை சு மூடி மறைத்தார் என்று கூறப்பட்டது.

அத்துடன் மருத்துவமனைகள், தொடக்கக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணொளிகளை சு பதிவு செய்திருந்தார் என்றும் அறியப்படுகிறது.

சிங்கப்பூரரான சு, 2018ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இருப்பினும் போலிஸ் விசாரணையில் இருந்த சமயத்தில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் குற்றம் இழைத்தார்.

அதே மாதத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட சு, மீண்டும் ஜூலை மாதத்தில் அதே குற்றத்தைச் செய்தார்.

பெண்களின் மானத்தை அவமதித்ததன் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளை இன்று சு ஒப்புக்கொண்டார். தண்டனை விதிப்பின்போது மேலும் 13 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

சு 2009ல் பிரபலமானதொரு தொடக்கக் கல்லூரியில் மாணவராக இருந்தபோது இத்தகைய காணொளிகளை எடுக்கத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.

பின்னர் இரண்டு மருத்துவமனைகள், வெவ்வேறு பேரங்காடிகள், வேறொரு தொடக்கக் கல்லூரி போன்ற இடங்களிலும் அவரது குற்றங்கள் தொடர்ந்தன.

பதிவுசெய்த காட்சிகளைத் தான் விரும்பிய சமயத்தில் சு மீண்டும் பார்த்து வந்தார் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்