என்டியுசியின் இரண்டு புதிய சங்கங்கள்

என்டியுசியின் இரண்டு புதிய சங்கங்கள்

1 mins read

சுயதொழில் புரிவோர், தன்னுரிமைத் தொழிலர் ஆகியோரைப் பிரதிநிதிக்க, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) இரண்டு புதிய சங்கங்களை அமைத்துள்ளது. குறிப்பாக, புத்தாக்க உருவாக்க நிபுணர்களுக்காகவும் விநியோகச் சேவை ஓட்டுநர்களுக்காகவும் இரு சங்கங்களும் உருவாக்கப் பட்டுள்ளதாக என்டியுசி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

வேலை பாதுகாப்பையும் வாய்ப்புகளையும் மேம்படுத்திக் கொள்ள இவ்விரு தரப்பினரும் தயாராக இருப்பதாகக் கூறப் பட்டது. புத்தாக்க உருவாக்க நிபுணர் பிரிவில் புகைப்படக் காரர்கள், காணொளிப் பதிவாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் போன்றோர் அடங்குவர். இப்பிரிவினரும் விநியோகச் சேவையில் உள்ள ஓட்டுநர்களும் வெவ்வேறு பங்குதாரர்களுடன் அணுக்கமாகச் செயல்பட்டு தங்கள் வேலை தொடர்பான ஆதரவுக் கட்டமைப்புகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் போன்ற விவகாரங்களைப் பற்றி ஆலோசிப்பர் என்று கூறப்பட்டது.