சிங்கப்பூரில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம் துவக்கம்

சிங்கப்பூரில் இரத்தினக்கல் வர்த்தகர்கள் சங்கம் துவக்கம்

1 mins read

சிங்­கப்­பூ­ரில் இரத்­தி­னக்­கல் வர்த்­த­கர்­க­ளுக்­கென சங்­கம் ஒன்று கடந்த ஜூலை மாதம் தொடங்­கப்பட்டது.

ஜெம் டிரே­டர்ஸ் அசோ­சி­யே­ஷன் ஆஃப் சிங்­கப்­பூர் என்ற இலாப நோக்­கற்ற சேவை அமைப்­பின் தலை­வ­ராக திரு முஹம்­மது பிலால் உள்­ளார்.

துணைத் தலை­வ­ராக திரு முஹம்­மது அக்­பர் சுல்­தான், செய­லா­ளர் திரு ரஃபி அக­மது, உத­விச் செய­லா­ளர்­க­ளாக திரு முகம்­மது சாதிக், திரு பஷீர் அக­மது, பொரு­ளா­ள­ராக திரு சபீர் அக­மது, உதவி பொரு­ளா­ள­ராக திரு அப்­துல் ரஷீது, நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர்­க­ளாக திரு அமா­னுல்­லாஹ், திரு முகம்­மது ரஃபீக் மற்­றும் திரு ஜான­கி­ரா­மன் சர­வ­ணன் உள்­ள­னர்.